ஐ. எக்ஸ். பெரைரா
திவான்பகதூர் செவாலியே இக்னேசியசு சேவியர் பெரைரா (I. X. Pereira, ஏப்ரல் 26, 1888 - சூலை 24, 1951) இலங்கை, மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார். 1924 முதல் 23 ஆண்டுகள் அரசியல் பணியாற்றியவர். பதில் தொழில் அமைச்சராகப் பணியாற்றியவர். கப்பல் வணிகத்துறையில் கவனம் செலுத்தியவர்.[1] இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தெரிவான முதலாவது மலையக இந்தியத் தமிழர் இவரே.
இக்னேசியஸ் சேவியர் பெரைரா I. X. Pereira | |
---|---|
1934 இல் ஐ. எக்ஸ். பெரெய்ரா | |
திவான் பகதூர் | |
பதில் தொழில் அமைச்சர் | |
பதவியில் 29 சனவரி 1945 – 14 ஏப்ரல் 1945 | |
முன்னையவர் | ஜி. சி. எஸ். கொரியா |
பின்னவர் | ஜி. சி. எஸ். கொரியா |
இலங்கை அரசாங்க சபையின் மலையக உறுப்பினர் | |
பதவியில் 1931–1947 | |
இலங்கை சட்டவாக்கப் பேரவை மலையக உறுப்பினர் | |
பதவியில் செப்டம்பர் 27, 1924 – 1931 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இக்னேசியசு சேவியர் பெரைரா 26 ஏப்ரல் 1888 தூத்துக்குடி, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 24 சூலை 1951 கொழும்பு, இலங்கை | (அகவை 63)
தேசியம் | இலங்கையர் |
துணைவர் | மார்கரெட் பெரெய்ரா |
பெற்றோர் | எஃப். எக்ஸ். பெரைரா |
தொழில் | அரசியல்வாதி |
வாழ்க்கைக் குறிப்பு
இந்தியாவில் தூத்துக்குடியில் பரதவர் குலத்தைச் சேர்ந்த கத்தோலிக்கக் குடும்பத்தில் எஃப். எக்ஸ். பெரைரா என்ற தொழிலதிபருக்கு மகனாகப் பிறந்தார் இக்னேசியசு பெரைரா. 1889 இல் குடும்பத்துடன் இலங்கைக்கு குடிபெயர்ந்தார்.[2] தந்தை மும்பை நகரில் "சிந்தியா ஸ்டீம் நேவிகேசன்" என்ற பெயரில் இயங்கிய கப்பல் நிறுவனத்தின் முகவராகவும் ஈடுபட்டு வந்தார்.[2] தந்தை கொழும்பு நகரில் புறக்கோட்டையில் முதலாம் குறுக்குத் தெருவில் எஃப்.எக்சு.பெரெய்ரா அன்ட் சன்சு என்ற பெயரில் ஒரு பல்-பொருள் அங்காடியை ஆரம்பித்து நடத்தி வந்தார். 1905 மார்ச் மாதத்தில் தந்தை இறந்ததும், அவரது நிறுவனங்களை அவரது மூத்த மகன் இக்னேசியசு பெரைரா எடுத்து நடத்தினார்.[3] தனது வணிகத்தை காப்பீடு, மற்றும் கப்பல் முகவர் பணிகளுக்கும் விரிவடையச் செய்தார்.[2][4] இவருக்கு ஒன்பது பிள்ளைகள்.[4] இவரது ஒரு மகன் ஜோசப் ஆகஸ்டின் பெரைரா இலங்கை மூதவை உறுப்பினராக இருந்தவர்.[5]
அரசியலில்
1924 செப்டம்பர் 27 இல் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் இந்திய மலையகத் தமிழரின் முதலாவது உறுப்பினராக 5,141 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][6] ஏழாண்டுகள் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த இவர் 1931 இல் இலங்கை அரசாங்க சபைக்கு நியமிக்கப்பட்டார். 1936 அரசாங்க சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1947-ஆம் ஆண்டு வரை அரசாங்க சபையில் உறுப்பினராக இருந்தார்.[1]
அன்றைய தொழிலமைச்சராக இருந்த ஐ. சி. எஸ். கொரியா வெளிநாடு சென்றிருந்த வேளையில் 1945 சனவரி 29 முதல் 1945 ஏப்ரல் 14 வரை பதில் தொழில் அமைச்சராகப் பணியாற்றினார்.[1]
பட்டங்களும் நினைவுகளும்
- 1934 சனவரி 1 இல் அப்போதைய இந்தியாவின் ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபு இவருக்கு "திவான் பகதூர்" பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.[1]
- இவரது நூற்றாண்டு நினைவாக, 1988 ஏப்ரல் 26 இல் இலங்கை அரசு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டுக் கௌரவித்தது.[7]
- 1988 இல் கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள புட்ச்சர்சு வீதிக்கு இவரது நினைவாக "ஐ.எக்ஸ்.பெரெய்ரா வீதி" எனப் பெயர் சூட்டப்பட்டது.[4]
சமூகப் பணிகள்
பெரி. சுந்தரத்துடன் இணைந்து மத்திய இந்தியர் சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.[8] சமய, சமூகத் துறைகளில் அதிக கவனம் காட்டினார். இலங்கை கிராமியக் குழுக்கள் தேர்தல்களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1938 ஆம் ஆண்டில் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து அரசாங்க சபையில் குரல் கொடுத்தார்.[9]
உசாத்துணை
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "இக்னேசியஸ் சேவியர் பெரைரா". கொழுந்து (2): பக். 2. சனவரி 1989. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_1989.01. பார்த்த நாள்: 2016-06-19.
- ↑ 2.0 2.1 2.2 "Augustine Pereira - 50 years in business". டெய்லி நியூஸ். 11 ஏப்ரல் 2012. http://archives.dailynews.lk/2002/04/11/bus11.html. பார்த்த நாள்: 19 சூன் 2016.
- ↑ "Twentieth Century Impressions of Ceylon". https://books.google.com.au/books?id=eUF_rS8FEoIC&pg=PA480&lpg=PA480&dq=%22I.+X.+Pereira%22&source=bl&ots=IjiJkLhXhh&sig=t5_69pdsYIxlqfp9cMtaHgsZfpA&hl=en&sa=X&ved=0ahUKEwjxkbyonbPNAhWEQpQKHebQCvgQ6AEIMzAF#v=onepage&q=%22I.%20X.%20Pereira%22&f=false.
- ↑ 4.0 4.1 4.2 "A bond that grew from courting days on the tennis court". சண்டே டைம்சு. 25 ஆகத்து 2013. http://www.sundaytimes.lk/130825/plus/a-bond-that-grew-from-courting-days-on-the-tennis-court-59180.html. பார்த்த நாள்: 19 சூன் 2016.
- ↑ "Appreciatuion". சண்டே லீடர். 30 சூலை 2008. http://www.rootsweb.ancestry.com/~lkawgw/appreciation08.htm. பார்த்த நாள்: 19 சூன் 2016.
- ↑ The Ferguson's Ceylon Directory. 1925. பக். பக். 510. http://www.historyofceylontea.com/Fergusons/view/11.
- ↑ "Sri Lanka - 100th Anniversary of the Birth of Chevalier I. X. Pereira issue (#56287) - StampData". http://stampdata.com/issue.php?id=56287. பார்த்த நாள்: 19 June 2016.
- ↑ ""இலங்கை இந்திய காங்கிரசாக" உருமாறிய அமைப்புகள் - நமது மலையகம்". http://www.namathumalayagam.com/2014/08/blog-post_27.html. பார்த்த நாள்: 19 சூன் 2016.
- ↑ ""தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை" 1939 வீரகேசரி தலைப்பு - நமது மலையகம்". http://www.namathumalayagam.com/2014/08/1939.html. பார்த்த நாள்: 19 சூன் 2016.