ஏ. தேவராஜன்

ஏ. தேவராஜன் (பிறப்பு: சூன் 20 1967) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் மலாய் மொழி ஆசிரியரும், சிறந்த ஒவியருமாவார். மற்றும் "அருவி", "இலக்கியக் குரிசில்" ஆகிய இதழ்களில் துணைசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர் மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

ஏ. தேவராஜன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஏ. தேவராஜன்
பிறந்ததிகதி சூன் 20 1967
அறியப்படுவது எழுத்தாளர், ஒவியர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1983 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பல சிறுகதைகள், கட்டுரைகள், 2000த்துக்கு மேற்பட்ட புதுக் கவிதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ஜெர்மனியிலிருந்து வரும் "பூவரசு", டென்மார்க்கிலிருந்து வரும் "இளைஞன்" இதழ்களிலும் இவரது எழுத்துக்கள் வெளிவந்துள்ளன.

நூல் பட்டியல்

கவிதை

  • அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது, தங்கமீன் பதிப்பகம், 2012

சிறுகதை

  • அரிதாரம் கலைந்தவன், தங்கமீன் பதிப்பகம், 2009
  • ஏழாவது குற்றம், தங்கமீன் பதிப்பகம், 2013
  • காதல் நதி, சாய் அச்சகம் மலாக்கா, 2020

தொகுப்பாசிரியர்

  • மொட்டுகளே, (மாணவர் கவிதைகள்) சாய் அச்சகம் மலாக்கா, 2020
  • தமிழ் மொழி, (மாணவர் கட்டுரை) சாய் அச்சகம் மலாக்கா, 2020
  • விழிதிறவி, சாய் அச்சகம் மலாக்கா, 2020

விருது, பரிசு

  • ‘ஒளியைத் தேடி’, ‘புது துரை’, ‘விடியல்’, மலாக்கா காஜா பேராங், தமிழ் இளைஜர் மணிமன்றம் இலக்கிய போட்டி, 1983,1984,1985
  • கவிதை துறையில் பரிசில், டான்ஶ்ரீ டத்தோ ஆதிநாகப்பன் இலக்கிய பரிசுப் பாராட்டு மடல், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், பிப்பரவரி 28, 1998
  • ‘இடைச்சாரி’ முதல் பரிசு , தென்றல் சிறுகதை போட்டி 2005
  • ‘பொய்யெல்லாம் பொய்யல்ல’ முதல் பரிசு, தென்றல் சிறுகதை போட்டி, 2008.
  • ‘ஏழாவது குற்றம்’, இரண்டாவது பரிசு டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தக பரிசளிப்பு திட்டம், மலேசிய எழுத்தாளர் சங்கம், 2014
  • ’அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது’ முதல் பரிசு டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தக பரிசளிப்பு திட்டம், அக்டோபர் 16, 2016
  • புதுக்கவிதை முதல் பரிசு, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 24ம் ஆண்டு, டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், ஆக்டோபர் 21, 2010
  • புதுக்கவிதை மூன்றாம் பரிசு, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 24ம் ஆண்டு, டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், ஆக்டோபர் 21, 2010
  • புதுக்கவிதை இரண்டாம் பரிசு, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 24ம் ஆண்டு, டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், செப்டெம்பர் 18, 2017
  • ‘வெட்டி வேலா’ இலக்கியச் செம்மல் முனைவர் ரெ. கார்த்திகேசு பரிசு, நவம்பர் 5, 2017.
  • மூன்றாம் பரிசு, நல்லார்க்கினியன் மரபு கவி விருது, ஏப்ரல் 28, 2018
  • ‘பல குரல் வேந்தன்’ விருது, டாக்டர் எம்.ஜி.ஆர் கொள்கை இயக்கம், 2015

உசாத்துணை

மலேசிய நவீன கவிஞர்கள் (2): ஏ. தேவராஜன் கவிதைகள்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ஏ._தேவராஜன்&oldid=6159" இருந்து மீள்விக்கப்பட்டது