ஏகாம்பரநாதர் வண்ணம்
ஏகாம்பரநாதர் வண்ணம் என்பது இரட்டைப்புலவர் பாடிய நூல்களில் ஒன்று. காலம் 14ஆம் நூற்றாண்டு.
வண்ணம் என்பது ஒரு வகைச் சிற்றிலக்கியம்.
இது அகத்திணைச் சிற்றிலக்கியம். தலைவி தலைவனுடன் செல்லும் உடன்போக்கு பற்றியது. தலைவியாகிய தன் மகளைத் தேடிச் செல்லும் செவிலித்தாய் வழியில் வரும் முக்கோல் பகவரை (சான்றோரை) “என் மகளைப் பார்த்தீர்களா” என வினவுதலும், முக்கோல் பகவர் அதற்கு விடையாகச் சொல்லும் செய்திகளும் கொண்ட நூல் இந்த வண்ணம்.
இந்த நூலிலுள்ள பாடல் – எடுத்துக்காட்டு
- மறுத்தோன்ற வெளுத்த பிழை
- படப் பாந்தள் இடைச் செருகி
- வளர்ந்தோங்கி முடித்த சடையார் - காஞ்சனம் அனையார்
- மலர்க்காந்தள் முறுக்கு அவிழ ... [1]
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- ↑ எகாம்பரநாதர் வண்ணம்