எஸ். வி. சுப்பையா பாகவதர்

எஸ். வி. சுப்பையா பாகவதர் (இறப்பு: 3 சூலை 1954) பழம்பெரும் பாடகரும், தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார்.[1] 1930-40 களில் நாடக மேடையிலும் கிராமபோன் இசைத்தட்டுகளிலும் இவரது பாடல்கள் மிகப்பிரபலமாக விளங்கின. கர்நாடக இசை மட்டுமல்லாமல் கிராமிய, தெம்மாங்கு பாட்டுகளையும் இவர் மேடை நாடகங்களில் பாடியுள்ளார்.[1] 'சங்கீத வித்வத்சிகாமணி' என அழைக்கப்பட்டவர்.

சங்கீத வித்வத்சிகாமணி
எஸ். வி. சுப்பையா பாகவதர்
இயற்பெயர்/
அறியும் பெயர்
எஸ். வி. சுப்பையா பாகவதர்
பிறந்தஇடம் சாம்பவர் வடகரை, தென்காசி, தமிழ்நாடு
இறப்பு சூலை 3, 1954
தேசியம் இந்தியர்
அறியப்படுவது கருநாடக இசைப் பாடகர், நடிகர்

வாழ்க்கைக் குறிப்பு

சாம்பூர் வடகரை சுப்பையா பாகவதர் தென்காசி, சாம்பவர் வடகரை என்ற ஊரில் பிறந்தவர்.[1]

நடித்த திரைப்படங்கள்

மொத்தம் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே சுப்பையா பாகவதர் நடித்துள்ளார். 1935 இல் வெளியான சுபத்திரா பரிணயம் திரைப்படத்தில் அர்ஜுனனாக நடித்து 17 பாடல்களையும் பாடியுள்ளார். 1938-இல் கம்பர் (அல்லது) கல்வியின் வெற்றி படத்தில் கம்பராக "வாணி வரமருள் கல்யாணி", "ஞான சந்திர பிரபை", "தாய்வள நாடே இனிதாய் விடை தருவாய்" போன்ற பிரபலமான பாடல்களைப் பாடி நடித்தார்.

மறைவு

சுப்பையா பாகவதர் சிறிது காலம் சுகவீனமுற்ற நிலையில், 1954 சூலை 3 இல் தென்காசி,சாம்பவர் வடகரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[2] இவரது மகன் எஸ். வி. எஸ். நாராயணன் ஒரு மிருதங்க இசைக்கலைஞர் ஆவார். இவர் கிருஷ்ண பக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற பி. யு. சின்னப்பாவின் கதாகாலேட்சபத்திற்கு மிருதங்கம் வாசித்துள்ளார். இவரின் மகன் என். ஹரி ஒரு பிரபலமான மிருதங்கக் கலைஞர் ஆவார்.[3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 எஸ்.வி.சுப்பையா பாகவதர்
  2. "Death Of S. V. Subbiah Bhagavathar". NewspaperSG. Indian Daily Mail. 15 சூலை 1954. பார்க்கப்பட்ட நாள் 05 திசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. Rhythm on his finger tips பரணிடப்பட்டது 2016-10-29 at the வந்தவழி இயந்திரம், மாத்ருபூமி, ஆகத்து 26, 2016

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._வி._சுப்பையா_பாகவதர்&oldid=21574" இருந்து மீள்விக்கப்பட்டது