எஸ். ஏ. ரகீம்

செய்யது அப்துல் ரகீம் (Seyadu Abdul Raheem, 9 ஆகத்து 1921 - 1989) இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

எஸ். ஏ. ரகீம்
S. A. Raheem
இலங்கை நாடாளுமன்றம்
for மன்னார்
பதவியில்
1974–1977
முன்னையவர்வி. ஏ. அழகக்கோன்
பின்னவர்பி. எஸ். சூசைதாசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-08-09)9 ஆகத்து 1921
இறப்பு1989
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
முன்னாள் கல்லூரிபுனித சேவியர் ஆண்கள் கல்லூரி, மன்னார்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
யாழ்ப்பாணக் கல்லூரி

ஆரம்ப வாழ்க்கை

ரகீம் 1921 ஆகத்து 9 இல் பிறந்தார்.[1][2] ஆரம்பக் கல்வியை மன்னார் புனித சேவியர் ஆண்கள் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கற்றார்.[1][2]

அரசியலில்

ரகீம் 1960 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார். 1962 முதல் 1972 வரை மன்னார் நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார்.[1] 1970 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மன்னார் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் வி. ஏ. அழகக்கோனிடம் 69 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[3] அழகக்கோன் 1973 நவம்பர் 25 இல் இறந்ததை அடுத்து 1974 பெப்ரவரி 25 இடம்பெற்ற இடைத்தேர்தலில் 75 அதிகப்படியான வாக்குகளால் தமிழரசுக் கட்சி வேட்பாளர் செபமாலை ஜோன் மார்க் என்பவரை வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] 1977 இல் நடந்த தேர்தலில் இவர் போட்டியிடவில்லை.

அரசியலின் பின்னர்

அரசியலில் இருந்து ஓய்வெடுத்த பின்னர் ரகீம் 1978 ஆம் ஆண்டில் கென்யாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.[1] அனைத்திலங்கை முஸ்லிம் லீக் அமைப்பின் பிரதித் தலைவராகவும், நெற்சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் பிரதித் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.[1][2] 1989 ஆம் ஆண்டில் காலமானார்.[1][2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._ஏ._ரகீம்&oldid=24523" இருந்து மீள்விக்கப்பட்டது