எஸ். எம். நாயகம்

எஸ். எம். நாயகம் என அறியப்பட்ட சுந்தரம் மதுரநாயகம் சிங்கள திரைப்படங்களின் முன்னோடி ஆவார். முதலாவது சிங்கள பேசும் படமான கடவுனு பொறந்துவ என்ற திரைப்படத்தைத் தயாரித்தவர் இவரே.[1]

தொழில் வாழ்க்கை

இந்தியாவிலுள்ள மதுரையை பிறப்பிடமாகக் கொண்டவர். சோப், வாசனைத்திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வந்தார். இவரது தொழிற்சாலைகள் இந்தியாவிலும், அந்நாளைய பிரித்தானிய இலங்கையிலும் அமைந்திருந்தன.

1940 களில் இந்தியாவில் திரைப்படத் தொழில் மிகவும் விரிவடைந்து வளர்ந்து வந்தது. நாயகம் மதுரையில் ஸ்ரீ முருகன் நவகலா லிமிடெட் என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். அத்துடன் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் சித்ரகலா மூவிடோன் என்ற படப்பிடிப்பு நிலையத்தையும் நிறுவினார்.

இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக 1946 ஆம் ஆண்டு குமரகுரு என்ற திரைப்படம் தயாரித்து வெளியிடப்பட்டது. அடுத்த ஆண்டு தாய் நாடு என்ற திரைப்படத்தைத் தயாரித்து இந்தியா சுதந்திரமடைந்த 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் வெளியிடப்பட்டது.

எஸ். எம். நாயகத்தின் கூற்றுப்படி அவரது சிங்கள நண்பர்கள் தமிழ், இந்திப் படங்களைப் பார்த்துக் களிப்புற்ற அதே வேளை, தமது சொந்த மொழியில் திரைப்படங்கள் இல்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்களாம். ஆகவே, நாயகம் ஒரு சிங்கள திரைப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார்.[2]

கடவுனு பொறந்துவ

பல கதைகளைப் பரிசீலித்தபின், இலங்கையில் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்ட ஒரு நாடகமான கடவுனு பொறந்துவ என்ற நாடகத்தின் கதையை வாங்கினார். திரைப்படம் மதுரையில் தயாரானது. தொழிநுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தியர்கள். நடிகர், நடிகைகள் இலங்கையிலிருந்து வந்தார்கள். இந்தப் படம் இலங்கை கொழும்பிலுள்ள கிங்ஸ்லி தியேட்டரில் திரையிடப்பட்டது. முதற்காட்சிக்கு அப்போது இலங்கை அமைச்சரவையில் முதன்மை அமைச்சராகவிருந்த டி. எஸ். சேனநாயக்கா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இவரே பிற்காலத்தில் இலங்கையின் முதல் பிரதமர் ஆனார்.[2]

தயாரித்த திரைப்படங்கள்

திரைப்படம் ஆண்டு மொழி இயக்குனர்
குமரகுரு 1946 தமிழ் ஜோதி சின்ஹா
தாய் நாடு 1947 தமிழ் டி. எஸ். மணி
கடவுனு பொறந்துவ[3] 1947 சிங்களம் ஜோதி சின்ஹா
பிரேம தரங்கய[4] 1953 சிங்களம் ஏ. பாஸ்கர் ராஜ்
புதும லேலி[5] 1953 சிங்களம் ஏ. எஸ். நாகராஜன்
அகங்கார ஸ்திரீ[6] 1954 சிங்களம் ஏ. பாஸ்கர் ராஜ்
மதலன்[7][8] 1955 சிங்களம் ஏ. எஸ். நாகராஜன்
ரம்யலதா[9] 1956 சிங்களம் ஏ. பாஸ்கர் ராஜ்
சொஹொயுறோ[10] 1958 சிங்களம் எல். எஸ். ராமச்சந்திரன்
நலங்கன[11] 1960 சிங்களம் எல். எஸ். ராமச்சந்திரன்

மேற்கோள்கள்

  1. "இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன இணையதளம்" இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927044031/http://www.srilankafilmcorp.com/about/. பார்த்த நாள்: 23 June 2018. 
  2. 2.0 2.1 "First Sinhala Talkie “Broken Promise” was Released 70 Years Ago on Jan 21 1947" (in ஆங்கிலம்). 26 ஜனவரி 2017 இம் மூலத்தில் இருந்து 2018-06-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180620022907/http://dbsjeyaraj.com/dbsj/archives/50955. பார்த்த நாள்: 20 ஜூன் 2017. 
  3. "Kadawunu Poronduwa". http://www.films.lk/kadawunu-poronduwa-sinhala-film-1.html. பார்த்த நாள்: 22 ஜூன் 2018. 
  4. "Prema Tharangaya" இம் மூலத்தில் இருந்து 22 ஜூன் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180622010539/http://www.films.lk/prema-tharangaya-sinhala-film-16.html. பார்த்த நாள்: 22 June 2018. 
  5. "Puduma Leli". http://www.films.lk/puduma-leli-sinhala-film-20.html. பார்த்த நாள்: 22 ஜூன் 2018. 
  6. "Ahankara Stree". http://www.films.lk/ahankara-stree-sinhala-film-24.html. பார்த்த நாள்: 22 ஜூன் 2018. 
  7. "Mathalan". http://www.films.lk/mathalan-sinhala-film-31.html. பார்த்த நாள்: 22 ஜூன் 2018. 
  8. Mathalan
  9. "Ramyalatha". http://www.films.lk/ramyalatha-sinhala-film-39.html. பார்த்த நாள்: 22 ஜூன் 2018. 
  10. "Sohoyuro". https://rateyourmusic.com/film/සොහොයුරෝ/. பார்த்த நாள்: 22 ஜூன் 2018. 
  11. "Nalangana". https://rateyourmusic.com/film/නළඟන/. பார்த்த நாள்: 22 ஜூன் 2018. 
"https://tamilar.wiki/index.php?title=எஸ்._எம்._நாயகம்&oldid=28515" இருந்து மீள்விக்கப்பட்டது