எஸ். என். நாகராசன்
எஸ். என். நாகராசன் (28 திசம்பர் 1927 – 24 மே 2021) இந்தியாவின் மூத்த வேளாண்மை அறிவியலாளர்களில் ஒருவர் மற்றும் மார்க்சிய சிந்தனையாளர். கீழைமார்க்சியம் என்ற கருத்துநிலையை முன்வைத்தவர்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எஸ். என். நாகராசன் |
---|---|
பிறந்ததிகதி | 28 திசம்பர் 1927 |
பிறந்தஇடம் | சத்தியமங்கலம் |
இறப்பு | மே 24, 2021 | (அகவை 93)
அறியப்படுவது | மார்க்சிய ஆய்வாளர் |
வாழ்க்கை வரலாறு
எஸ். என். நாகராஜன் 1927-இல் கோவை, சத்தியமங்கலம் என்ற ஊரில் பிறந்தார். வேளாண்மையில் முனைவர் பட்டம்பெற்றார். இந்திய வேளாண்மை ஆய்வுக்கழகத்தில் முதுநிலை அறிவியலாளராக பணியாற்றினார். பசுமைப் புரட்சியை எதிர்த்து ஆய்வகத்தில் இருந்து வெளியேறினார். தன்னை முழுமையாகவே ஒரு மார்க்சிய களப்பணியாளராக ஆக்கிக்கொண்டார்
எஸ்.என்.நாகராஜன் ‘புதிய தலைமுறை’ என்ற சிற்றிதழை முன்னின்று நடத்தினார். மார்க்சிய ஆய்வில் ஒரு மாணவர் வரிசையை அவரால் உருவாக்க முடிந்தது. ஞானி அவரது நண்பரும் மாணவருமாக இருந்தார். கோவை ஞானி பின்னர் நிகழ் போன்ற சிற்றிதழ்கள் வழியாக அவரது சிந்தனைகளை முன்னெடுத்தார்
எஸ்.என்.நாகராஜன் கீழைமார்க்சியம் என்ற கருதுகோளை முன்வைத்தார். மார்க்சியம் அடிப்படையில் ஒரு ஐரோப்பிய சிந்தனையாகவே புரிந்துகொள்ளப்பட்டது என்றார். அதை ஓர் மேலைநாட்டு அறிவியல் சிந்தனையாக அணுகக்கூடாது அதை மெய்யியல் நோக்கில் அணுகவேண்டும் என்றார். அன்பில்லாத சித்தாந்தம் அழிவை நோக்கிச்செல்லக்கூடும் என்று சொன்ன நாகராஜன் கீழைநாடுகளுக்குரிய ஒரு மார்க்சியத்துக்காக வாதிட்டார். அதை கீழைமார்க்சியம் என்று குறிப்பிட்டார்
நூல்கள்
- கீழை மார்க்சியம்
- கம்யூனிசம் விடுதலையின் இலக்கணம்
- தமிழகத்தில் வேளாண்மை
- மார்க்சியம் கிழக்கும் - மேற்கும்
- அழிவின் தத்துவம்
- கிழக்கு வெல்லும்
- வாழும் மார்க்சு
- Eastern Marxism
- ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது
வெளி இணைப்புகள்
- காலச்சுவடு மதிப்புரை பரணிடப்பட்டது 2011-11-16 at the வந்தவழி இயந்திரம்