எம். ஏ. எம். சுக்ரி

கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி M A M Shukri (1940 ஜூன் 24) இலங்கையின் குறிப்பிடத்தக்க முஸ்லிம் அறிஞர்களில் ஒருவர். இலங்கை முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்து கொண்டிருப்பவர்.

எம். ஏ. எம். சுக்ரி
இயற்பெயர் எம்.ஏ.எம். சுக்ரி
பிறப்பு சுக்ரி
பணி பணிப்பாளர், ஜாமிய்யா நளீமிய்யா, பேருவளை.

சுக்ரி தென் மாகாணத்தில், மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தீஞ்சுவைசொட்டும் நல்ல பேச்சாளரான இவர், ஆரம்ப காலத்தில் கவிதை, சிறுகதை என்பவற்றில் ஈடுபாடு காட்டியுள்ளார். பிற்காலத்தில் சமய இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு சமய இலக்கியங்களைத் தந்துள்ளார். இங்கிலாந்து எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சூபித்துவத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். இலங்கையில் காணப்படும் முன்னோடி இசுலாமியப் பல்கலைக்கழகமான ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார். இவரது நூல்கள் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஆய்வில் குறிப்பிடத்தக்கவையாகக் கருதப்படுகின்றன.

இவரது ஆக்கங்கள் ஈழத்தில் மட்டுமன்றி பிறநாட்டுச் சஞ்சிகை, பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. பன்மொழிப் பாண்டித்தியம் மிக்கவர். 'இஸ்லாமிய சிந்தனை' என்ற ஆய்வுச் சஞ்சிகையின் ஆசிரியராவும் இவர் பணியாற்றியுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்

  • காலத்தின் அறைகூவலும் முஸ்லிம்கள் பணியும் (1969)
  • தக்வாவும் நவயுகத்தின் சவாலும் (1982)
  • நளீம் ஹாஜியார் வாழ்வும், பணியும் (1993)
  • ஹதீஸ் வரலாறும் முக்கியத்துவமும் (1993)
  • பேரறிஞர் இமாம் கஸ்ஸாலி (1993)
  • இஸ்லாமியக் கல்வி (ஆங்கில நூல்) (1979)
  • இலங்கை முஸ்லிம்கள் (ஆங்கில நூல்) (1986)
  • அல் குர்ஆன் (1981)
  • ஹதீஸ+ம் சுன்னாவும் (1983)
  • இஸ்லாமிய மனித உரிமைகளும் (1996)
  • இஸ்லாமிய பண்பாட்டு மத்திய நிலையங்கள்

உத்தியோகபூர்வ இணையத்தளம்

"https://tamilar.wiki/index.php?title=எம்._ஏ._எம்._சுக்ரி&oldid=15260" இருந்து மீள்விக்கப்பட்டது