என். எஸ். மாதவன்
என். எஸ். மாதவன் என்பவர் முன்னணி மலையாள இலக்கியவாதிகளில் ஒருவர். இவர் எழுதும் புதினங்கள், சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் ஆகியன பிரபலமாக அறியப்படுகின்றன.
இளமைக் காலம்
மாதவன், எறணாக்குளத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்தார். எறணாக்குளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பொருளியல் படித்தார். பின்னர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகத்தில் பொருளியில் முதுகலை பயின்றார். மலையாள இலக்கிய நாளேடான மாத்ருபூமி நடத்திய போட்டியில், சிசு என்ற தலைப்பில் சிறுகதை எழுதி முதற்பரிசை வென்றார். 1975 ஆம் ஆண்டில், இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து பீகாரில் பணியாற்றினார்.
படைப்புகள்
- சூளைமேட்டிலே சவங்கள்
- திருத்
- ஹிகுய்தா (கொலம்பிய விளையாட்டு வீரர் பெயர்)
- பற்யயா கதைகள்
- நீலவிழி
- ரண்டு நாடகங்கள் (நாடகம்)
- வான்மரங்கள் வீழும்போள்
விருதுகள்
- பத்மப்பிரபா விருது - 2010
- கேரளசாகித்திய அக்காதமி விருது - ஹிக்விற்ற
- முட்டத்துவர்க்கி விருது
- ஓடக்குழல் விருது
- வி.பி. சிவகுமார் ஸ்மாரக கேளி விருது
- பத்மராஜன் விருது
- கதா ப்ரைஸ் - தில்லி
இணைப்புகள்
- ஆஃப்டர்வேர்டு (ஆங்கில மொழிபெயர்ப்பு)
- த கிரை (ஆங்கில மொழிபெயர்ப்பு)
- கனகம் (ஆங்கில மொழிபெயர்ப்பு)
- அம்மா (ஆங்கில மொழிபெயர்ப்பு)
- இவரைப் பற்றி பரணிடப்பட்டது 2016-06-06 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)