எஃப். எக்ஸ். சி. நடராசா

எஃப். எக்ஸ். சி. நடராசா
FXC Nadarasa.jpg
முழுப்பெயர் எஃப். எக்ஸ். சி. நடராசா
பிறப்பு 21-07-1911
பிறந்த இடம் காரைநகர்,
யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
மகாவித்துவான்
மறைவு 16-03-1997
இலங்கை
தொழில் அரசுப்பணி

எஃப். எக்ஸ். சி. நடராசா (21 சூலை 1911 - 16 மார்ச்சு 1997 ) ஈழநாட்டின் யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகரில் தோன்றியவர். மகாவித்துவான் என்றும், எழுத்தாளர் என்றும் பலராலும் அறியப்பட்டவர். இவர் உருவாக்கிய மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

கல்வி

காரைநகர் அம்பலச் சட்டம்பியார், சுளிபுரம் அதிபர். சு. சிவபாதசுந்தரம், காரைநகர் உடையார் நாகலிங்கம், காரைநகர் சபாபதிப்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆரம்பத்தில் கற்றார். பின்னர் சுவாமி விபுலானந்தரைக் குருவாகக் கொண்டு பாலபண்டிதம் கற்றார். மட்டக்களப்பு கத்தோலிக்கப் பாடசாலைகளில் ஞானச் சகோதரர்களின் ஆதரவில் வளர்ந்தார். அக்காலத்தில் அருட் சகோதரர் இன்னாசிமுத்து, அருட் சகோதரர் பிலிப்பு ஆகியோரிடமும் கற்க நேர்ந்தது.[1]

எழுதிய நூல்கள்

தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • மட்டக்களப்பு மான்மியம்
  • ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு
  • ஈழத்து நாட்டார் பாடல்கள்
  1. சா. தவமணிதேவி (1991),மகாவித்துவான் F. X. C. நடராசா- ஆக்கங்கள் தேர்ந்த நூல் விபரப்பட்டியல், புனித வளனார் கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு
"https://tamilar.wiki/index.php?title=எஃப்._எக்ஸ்._சி._நடராசா&oldid=2478" இருந்து மீள்விக்கப்பட்டது