ஊவா மாகாணம்
ஊவா (Uva, சிங்களம்: ඌව) இலங்கையில் பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாகானத்தின் தலைநகர் பதுளை ஆகும். இது 1896 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மத்திய மாகாணம், தென் மாகாணம், கிழக்கு மாகாணம், ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் இது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள்தொகை 1,259,880 ஆகும். இது இலங்கை மாகாணங்களில் இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணம் ஆகும்.
ஊவா Uva ඌව | |
---|---|
மாகாணம் | |
அப்புத்தளை-பெரகலை இடையில் இருந்து | |
இலங்கையில் அமைவிடம் | |
நாடு | இலங்கை |
அமைப்பு | 1886 |
சேர்க்கை | 14 நவம்பர் 1987 |
தலைநகர் | பதுளை |
பெரிய நகரம் | பதுளை |
அரசு | |
• ஆளுநர் | நந்தா மத்தியூ |
• முதலமைச்சர் | சசீந்திர குமார ராசபக்ச |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,500 km2 (3,300 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 4வது (மொத்தப் பரப்ப்ளவில் 12.92%) |
மக்கள்தொகை (2011 கணக்கீடு) | |
• மொத்தம் | 12,59,800 |
• தரவரிசை | 7வது (மொத்த மக்கள்தொகையில் 6.3%) |
• அடர்த்தி | 150/km2 (380/sq mi) |
Gross Regional Product (2010)[1] | |
• மொத்தம் | ரூ. 220 பில்லியன் |
• Rank | 8வது (4.6%) |
நேர வலயம் | இலங்கை (ஒசநே+05:30) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | LK-8 |
அதிகாரபூர்வ மொழிகள் | சிங்களம், தமிழ் |
சின்னங்கள் | குருளு ராஜா (Rhynchostylis retusa) |
இணையதளம் | www.tourismuva.com |
இம்மாகாணத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்கள் துன்கிந்தை அருவி, தியலுமை அருவி, இராவணன் அருவி, யால தேசிய வனம் (தெற்கு, கிழக்கு மாகாணங்களுடனும் இணைந்துள்ளது) கல்லோயா தேசியப் பூங்கா (கிழக்குடன் இணைந்தது) ஆகியவை ஆகும். கல்லோயா குன்றுகள், மற்றும் மத்திய குன்றுகள் இம்மாகாணத்தின் முக்கிய மலைப்பகுதிகள் ஆகும். மகாவலி, மெனிக் ஆறுகள், மற்றும் சேனநாயக்கா சமுத்திரம், மாதுரு ஓயா ஆகியன இங்குள்ள முக்கியமான நீர் நிலைகள் ஆகும்.
வரலாறு
இராமாயணக் கதாபாத்திரமான இராவணன் பதுளையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததாக நம்பப்படுகிறது. இராவணன் அருவி, ஸ்த்ரீபுரம் வளைவு சுரங்கம், ஹக்கலை மலை, தியூரும்வலை கோயில் ஆகியன இராவணனின் கதையுடன் தொடர்புள்ளவையாகும். கதிர்காமம் முருகன் கோயில் ஊவா மாகாணத்திலேயே அமைந்துள்ளது.
பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக இடம்பெற்ற 1818 கிளர்ச்சி ஊவா மாகாணத்திலேயே ஆரம்பமானது. பிரித்தானியர் இக்கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.[2]
மாவட்டங்கள்
ஊவா இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- பதுளை மாவட்டம் 2,861கிமீ2
- மொனராகலை மாவட்டம் 5,639கிமீ2
முக்கிய நகரங்கள்
- பதுளை (மாநகர சபை)
- பண்டாரவளை (மாநகரசபை)
- அப்புத்தளை (நகரசபை)
- மொனராகலை
- வெலிமடை
- பசறை
- எல்லா
- மகியங்கனை
- தியத்தலாவை
- ஆலிஎலை
- பிபிலை
- வெல்லவாயா
- பெரகலை
- லுணுகலை
- புத்தளை
- மதுல்லை
- கதிர்காமம்
- தனமல்விலை
- பதல்கும்புரை
- சியாம்பலந்துவை
- ஓக்கம்பிட்டி
படக்காட்சியகம்
அப்புத்தளையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்
மேற்கோள்கள்
- ↑ :.News Line : North, East record highest GDP growth rate
- ↑ Sri Lanka is to revoke British Governor’s infamous Gazette Notification பரணிடப்பட்டது 2016-01-02 at the வந்தவழி இயந்திரம், Asian Tribune, Sat, 2011-03-12
வெளி இணைப்புகள்
- ஊவா மாகாணத்திலுள்ள நகரங்கள் பரணிடப்பட்டது 2007-03-10 at the வந்தவழி இயந்திரம்
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |