ஊட்டி வானொலி அதிர்வெண் தொலைநோக்கி
ஊட்டி வானொலி அதிர்வெண் தொலைநோக்கி அல்லது ஊட்டி ரேடியோ தொலைநோக்கி தென்னிந்தியாவின் உதகமண்டலத்திற்கு அருகே உள்ள முத்தொரை எனும் ஊரில் அமைந்துள்ளது.[3] இது இந்திய அரசின் அணு சக்தித் துறையினால் நிதியுதவி அளிக்கப்படும் டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தின் ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தின் (NCRA)[4][5][6] ஒரு பகுதியாகும்[1] . ஊட்டி ரேடியோ தொலைநோக்கி (ORT) 530 மீ நீளத்தையும், 30 மீட்டர் அகலத்தையும் உடைய உருளைவடிவ பரவளையவுரு தொலைநோக்கியாகும்.[4][7][8] இது 326.5 MHz அதிர்வெண்ணில், முன் முனையில் அதிகபட்சமாக 15 MHz அலை நீளத்தில் இயங்குகிறது.[9]
ஊட்டி ரேடியோ தொலைநோக்கி | |
ஊட்டியில் உள்ள ரேடியோ தொலைநோக்கி | |
நிறுவனம் | டாடா |
---|---|
அமைவு | முத்தொறை, ஊட்டி, தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 11°23′00″N 76°39′58″E / 11.383404°N 76.66616°E |
உயரம் | 2240 மீ |
காலநிலை | 70% clear days |
அலைநீளம் | 0.92 மீ[1] |
அமைக்கப்பட்ட காலம் | 1970 |
தொலைநோக்கி வகை | உருளைவடிவ பரவளையவுரு |
Angular resolution | 2.3deg x 5.5sec(dec)'[2] |
சேர்க்கும் பரப்பு | 16000 m2[2] |
Mounting | மத்தியகோட்டுத் தொலைகாட்டி |
இணையத்தளம் | Official Website |
வடிவமைப்பு
துருப்பிடிக்காத எஃகு கம்பிகள் பரவளைய பிரதிபலிப்பானை உருவாக்குகின்றன.ஊட்டி ரேடியோ டெலஸ்கோப் இந்திய உள்நாட்டு தொழில்நுட்ப வளங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. ORT 1970 இல் நிறைவு செய்யப்பட்டது. மேலும் இது உலகின் மிகவும் உணர்திறன் வாய்ந்த ரேடியோ தொலைநோக்கிகளில் ஒன்றாகத் தொடர்கிறது. இந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணிப்புகள் முக்கியமான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது மற்றும் சூரிய குடும்பம் மற்றும் கோள்களின் நிகழும் பல்வேறு நிகழ்வுகளை விளக்கியது.தொலைநோக்கியின் பிரதிபலிப்பு மேற்பரப்பு 1,100 மெல்லிய துருப்பிடிக்காத எஃகு கம்பிகளால் ஆனது, சிலிண்டரின் முழு நீளத்திற்கும் ஒன்றுக்கொன்று இணையாக இயங்குகிறது மற்றும் 24 ஸ்டீரபிள் (steerable ) பரவளைய சட்டங்களில் ஆதரிக்கப்படுகிறது. 90-டிகிரி மூலை பிரதிபலிப்பாளரின் முன் 1,056 அரை-அலை இருமுனைகளின் வரிசை தொலைநோக்கியின் முதன்மை ஊட்டமாக அமைகிறது. இது 2.3deg x 5.5sec(dec)' என்ற கோணத்தைக் கொண்டுள்ளது.
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Ooty Radio Telescope". Ooty.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-04.
- ↑ 2.0 2.1 "ORT Specifications". Ncra.tifr.res.in. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-02-04.
- ↑ "THE OOTY RADIO TELESCOPE". nilgiris.tn.gov.in. Archived from the original on 2011-01-14. பார்க்கப்பட்ட நாள் 2011-02-04.
- ↑ 4.0 4.1 "National Centre for Radio Astrophysics". Indianspacestation.com. Archived from the original on 2011-07-13. பார்க்கப்பட்ட நாள் 2011-02-04.
- ↑ "National Centre for Radio Astrophysics". Puneeducation.net. Archived from the original on 2011-07-24. பார்க்கப்பட்ட நாள் 2011-02-04.
- ↑ "Science Exhibition On Feb 28, 29 At Khodad In Junnar Taluka, Approximately 80 Km North Of Pune". Punescoop.com. Archived from the original on 2017-12-26. பார்க்கப்பட்ட நாள் 2011-02-04.
- ↑ "Cylindrical Palaboloyds telescopes". web listing. Buzzle.com. Archived from the original on 2010-01-03. பார்க்கப்பட்ட நாள் 2011-02-04.
- ↑ "The Ooty Synthesis Radio Telescope: First Results". Citeseerx.ist.psu.edu. பார்க்கப்பட்ட நாள் 2011-02-04.
- ↑ http://dx.doi.org/10.3929/ethz-a-005306639 ETH-Bib Collection