உல்லாசப்பறவைகள்
உல்லாசப்பறவைகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரதி அக்னிகோத்ரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
உல்லாசப்பறவைகள் | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | கே. என். சுப்பு (எஸ். பி. டி. பிலிம்ஸ்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ரதி அக்னிகோத்ரி |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | என். எம். விக்டர் |
வெளியீடு | மார்ச்சு 7, 1980 |
நீளம் | 4255 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் தெலுங்கில் 'பிரேம பிச்சி' எனவும் இந்தியில் 'தூ தில் தீவானே' எனும் பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் பெரும்பகுதி ஐரோப்பா நாடுகளிலும் மற்றும் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது.
நடிகர்கள்
- கமல்ஹாசன் - இரவி
- ரதி அக்னிகோத்ரி - நிர்மலா
- தீபா(உன்னி மேரி) - இரவியின் காதலி.
- மேஜர் சுந்தரராஜன் - மதனகோபால், இரவியின் தந்தை.
- சுருளி ராஜன் - இராஜு, இரவியின் நண்பன்.
- வெண்ணிற ஆடை மூர்த்தி - சினிமா இயக்குனர்.
- கே. நடராஜ் - இராஜகோபால்
பாடல்கள்
இளையராஜா அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் பஞ்சு அருணாசலம் அவர்களால் அனைத்து பாடல் வரிகளும் எழுதப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | அழகிய மலர்களின் புதுவித ஊர்வலமே ... | எஸ். ஜானகி | பஞ்சு அருணாசலம் | 3:37 |
2 | அழகு ஆயிரம் உலகம் முழுவதும் ... | எஸ். ஜானகி | பஞ்சு அருணாசலம் | 4:23 |
3 | தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் ... | ஜென்சி அந்தோனி | பஞ்சு அருணாசலம் | 4:32 |
4 | எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா ... | மலேசியா வாசுதேவன், எஸ். பி. பாலசுப்பிரமணியம் | பஞ்சு அருணாசலம் | 4:22 |
5 | ஜெர்மனியின் செந்தேன் மலரே ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | பஞ்சு அருணாசலம் | 5:39 |
6 | நான் உந்தன் தாயாக வேண்டும் ... | எஸ். ஜானகி | பஞ்சு அருணாசலம் | 4:29 |
- இந்தி மொழி பாடல்கள்
இந்தி பாடல் | பாடகர்கள் |
---|---|
"Aaj Khoye Se Ho Kyon Yun" (நான் உந்தன் தாயாக) | எஸ். ஜானகி |
"Dilbar Aa" (ஜெர்மனியின் செந்தேன் மலரே) | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
"Hai Pyar Ka Sangam" (தெய்வீக ராகம்) | எஸ். ஜானகி |
"Kitne Rangeen Hain" (அழகிய மலர்களின்) | எஸ். ஜானகி |
"Yeh Jahan Tum" (அழகு ஆயிரம்) | எஸ். ஜானகி |