உலகம்மை

உலகம்மை (Ulagammai) என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை வி. ஜெயப்பிரகாசு இயக்கி தயாரித்திருந்தார். கௌரி ஜி. கிசன், வெற்றி மித்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமிழ் எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய ஒரு கோட்டுக்கு வெளியே என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படம் 2023 செப்டம்பர் 22 அன்று வெளியானது.

உலகம்மை
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்வி. ஜெயபிரகாஷ்
தயாரிப்புவி. ஜெயபிரகாஷ்
கதைசு. சமுத்திரம்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. வி. மணி
படத்தொகுப்புசுரேசு உர்சு
கலையகம்மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாதமி
வெளியீடுசெப்டம்பர் 22, 2023 (2023-09-22)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்பே படத்தின் பின்னணி இசையை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தது. இப்படம் தமிழ்த் திரைப்படங்களில் இதுபோன்ற முதல் முயற்சியைக் குறிக்கிறது.[1][2]

நடிகர்கள்

தயாரிப்பு

முன்னதாக சாதி சனம் (1997), காதல் எஃப்எம் (2005) ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வி. ஜெயபிரகாஷ், குச்சி ஐஸ் என்ற தனது திரைப்படத்திற்கு பிந்தைய தயாரிப்புப் பணிகளை தாமதப்படுத்தி, 2021 இன் தொடக்கத்தில் உலகம்மை படத்தைத் தொடங்கினார். தமிழ் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் உரிமையைக் கொண்டுவந்தார். சமுத்திரத்தின் ஒரு கோட்டுக்கு வெளியே பிரபல நாவலை எழுத்தாளர் மனைவியிடமிருந்து பெற்று, கதையைச் சுற்றி ஒரு திரைக்கதையை உருவாக்கினார்.[3] கௌரி கிசன் முக்கிய வேடத்தில் நடித்தார். இளையராஜா படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு சூலை 2021 இல் திருநெல்வேலியில் தொடங்கியது.[4][5] படத்தின் தயாரிப்பு ஏப்ரல் 2022 இல் நிறைவடைந்தது [1]

ஒரு புதுமையான நடவடிக்கையாக, ஏப்ரல் 2022 இல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு முன்னதாக, படத்தின் பின்னணி இசையை படக்குழு வெளியிட்டது. தமிழ்த் திரைப்படங்களில் இதுவே முதல் முறை.[1][6]

வரவேற்பு

இப்படம் 2023 செப்டம்பர் 22 அன்று தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மாலை மலரின் ஒரு விமர்சகர், திரைப்படம் "ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான கதை" என்று குறிப்பிட்டு கலவையான விமர்சனத்தை அளித்தார்.[7] மின்னம்பலத்தைச் சேர்ந்த ஒரு விமர்சகர், படத்தில் இளையராஜாவின் பணியைப் பாராட்டினார்.[8]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உலகம்மை&oldid=31052" இருந்து மீள்விக்கப்பட்டது