உரோமரிசி ஞானம்
உரோமரிசி [1] 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர்.
இவர் தன் பெயரை ‘உரோமன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவர் பெயரில் 10 நூல்கள் உள்ளன.
இவை ரசவாத வைத்தியம், யோகம் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன.
அவற்றுள் ஒன்று உரோமரிசி ஞானம்.
இந்த நூலில் 28 கண்ணிகள் உள்ளன.
- பாடல்
- ஒண்ணான மவுனம் என்றே யோகம் விட்டால்
- ஒருபோதும் சித்தி இல்லை வாதம் தானும்
- பெண்ணார்தம் ஆசைதனை விட்டு வந்தால்
- பேரின்ப முத்திவழி பேசுவேனே
- அழைப்பதற்கு நல்லபிள்ளை ஆனால் நன்றே
- ஆகாத சீடர்களைச் சேர்த்தல் தோடம்
- பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான்
- பெண்டாட்டி மனம் குளிரப் பேசும் மாடு
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
- சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987
அடிக்குறிப்பு
- ↑ உரோமரிக்ஷி நாயனார்