உருப சொரூப அகவல்
உருப சொரூப அகவல் என்பது ஒரு சைவ சமய நூல்.
இதனை இயற்றியவர் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன கு௫ முதல்வர் சத்திய ஞானியின் ஞானாசிரியன் காவை அம்பலவாணத் தம்பிரான்.
பதி, பசு, பாசம் என முப்பிரிவாக இறைநிலையைக் காண்பது சைவம்.
இவற்றில் பாசத்தை முப்பிரிவாக்கி, பதி, பசு, ஆணவம், கன்மம், மாயை என ஐந்து பிரிவாக்கிக் காண்பது உண்டு.
இவற்றின் தசகாரியங்களைக் கூறுவது இந்தச் சிறுநூல்.
தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி என்னும் முப்பிரிவில் தத்துவ ரூபத்தை 8 பிரிவாக்கிக்கொண்டு 10 காரியங்களாகக் காண்பது தசகாரியம். அவை
|
|
இவற்றை இந்த நூல் விளக்குகிறது.
- இந்த நூலின் காலம் 14ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005