உருபுமயஉரைநடைக் கவிதைக்கம்

உரைநடைக் கவிதை அல்லது வசன கவிதை என்பது, உரைநடைபோல் அமைந்த கவிதை ஆகும். மிகச் சிலரே தமிழில் உரைநடைக் கவிதைகளை எழுதி வருகின்றனர். உரைநடைக் கவிதைகளைப் பலர் கவிதைகளாக ஏற்றுக்கொள்வதில்லை.[1]

தமிழ்நடையில் உரைநடை, பாட்டுநடை என்னும் பிரிவுகள் உண்டு. கவிதை என்பது பாட்டுநடையில் இருக்கும். பொதுவாக இக்காலத்தில் கவிதையை மரபுக்கவிதை என்றும் புதுக்கவிதை என்றும் பாகுபடுத்திப் பார்க்கின்றனர். புதுக்கவிதையானது எதுகை, மோனை, தளை, முதலான இலக்கண வரையறைக்கு உட்படாமல் சுருக்கமானதாகப் பொருளாழமும், கற்பனை நலனும் கொண்டு சில அடிகளால் அமைந்து காணப்படுகின்றன. இதனை, சப்பான் நாட்டு ஐக்கூ கவிதையோடு ஒப்பிடுகின்றனர்.

இக்கால உரைநடைக் கவிதைகள் கவியரங்குகளில் உரைநடையை அடிமடக்கி எழுதிப் படிக்கப்படுகின்றன. அவை புதுக்கவிதை போல் சுருக்கமானவை அல்ல.

காலக் கண்ணோட்டம்

உரைநடைக் கவிதைகள் பழங்காலத்தில் செய்யுள் என்னும் மரபுக் கவிதையின் ஊடே வந்தன.

மேற்கோள்கள்

  1. குமார், பொன்., உரைநடைக் கவிதை - ஓர் அலசல், கீற்று, 12 ஜனவரி 2011, 28 அக்டோபர் 2014 அன்று பார்க்கப்பட்டது.