உமாசங்கரி
உமா என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
உமாசங்கரி | |
---|---|
பிறப்பு | உமாசங்கரி 2 மார்ச்சு 1982 |
மற்ற பெயர்கள் | உமா |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2000–2007 (திரைப்படங்கள்) 2012–2013 (தொலைக்காட்சி) |
பெற்றோர் | டி. இராஜேந்திரபாபு சுமித்ரா |
வாழ்க்கைத் துணை | எச். துஷ்யந்த் (தி.2006-தற்போது வரை) |
தொழில்
இவர் 2006 ஆம் ஆண்டில், சிபிராஜுக்கு ஜோடியாக சக்தி சிதம்பரத்தின் கோவை பிரதர்ஸ் படத்தில் தோன்றினார். அதில் சத்தியராஜின் மருமகளாக நடித்தார். மேலும் புதுமுகங்களுடன் தொடாமலே என்னும் படத்தில் நடித்தார். சிக்கம்மா (புகழ்பெற்ற தமிழ் தொலைக்காட்சி த் தொடரான "சித்தி" இன் கன்னட மறு ஆக்கம்) மற்றும் வள்ளி ( புதிய தமிழ் தொலைக்காட்சித் தொடர்) போன்ற சில தொடர்களிலும் இவர் நடித்தார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
கன்னட திரையுலகின் வணிக இயக்குனரான டி. இராஜேந்திர பாபு மற்றும் நடிகை சுமித்ரா ஆகியோருக்கு உமா பிறந்தார். இவரது தங்கை, நட்த்திரா, 2011 இல் டூ என்ற படத்தில் அறிமுகமானார். இவர் படங்களில் நடிப்பதபடி, இந்திரா காந்தி திறந்த பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் பயின்றார்.[2][3]
இவர் இறுதியில் 2006 சூன் 15 அன்று பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக உள்ள எச். துஷ்யந்தை மணந்தார். அதன்பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.[4]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | வீரநடை | பூமயில் | தமிழ் | |
வானவில் | உமா | தமிழ் | ||
2001 | அம்மோ பொம்மா | லட்சுமி | தெலுங்கு | |
கலகலப்பு | மினி | தமிழ் | ||
நவ்வுத்து பாதகலிரா | சரளா | தெலுங்கு | ||
கடல் பூக்கள் | கயல் | தமிழ் | ||
2002 | குபேரன் | கௌரி | மலையாளம் | |
வசந்தமாலிகா | நந்தினி | மலையாளம் | ||
திலகம் | மாயா | மலையாளம் | ||
2003 | சொக்கத்தங்கம் | மரகதம் | தமிழ் | |
சூரி | ரிஷாபா / பிரியா | தமிழ் | ||
விகடன் | காவேரி | தமிழ் | ||
சபலம் | கிரேசி | மலையாளம் | ||
கல்யாண ராமுடு | கல்யாணியின் சகோதரி | தெலுங்கு | ||
2004 | தென்றல் | தாமரைச்செல்வி | தமிழ் | |
ரைட்டா தப்பா | விஜி | தமிழ் | ||
ஈ ஸ்னேஹதீரத்து | காயத்ரி | மலையாளம் | ||
சுவாமி | சீதா, கீதா |
தெலுங்கு | ||
2005 | அமுதே | வினயா | தமிழ் | |
செல்வம் | தென்றல் | தமிழ் | ||
2006 | உப்பி தாதா எம்.பி.பி.எஸ் | டாக்டர் உமா / சின்னு | கன்னடம் | |
லட்சுமி | சுவாதி | தெலுங்கு | ||
கோவை பிரதர்ஸ் | கணேசின் சகோதரி | தமிழ் | ||
தொடாமலே | மஞ்சு | தமிழ் | ||
இலக்கணம் | கயல்விழி | தமிழ் | ||
கள்ளரால்லி ஹூவாகி | நூர் ஜஹான் | கன்னடம் | ||
அடைக்கலம் | தமீஷ் | தமிழ் | ||
2007 | மணிகண்டா | லட்சுமி மணிகண்டன் | தமிழ் | |
ரசிகர் மன்றம் | பாரதி | தமிழ் | ||
2012-2013 | சிக்கம்மா | கன்னடம் | தொலைக் காட்சித் தொடர் | |
வள்ளி | வள்ளி | தமிழ் |
குறிப்புகள்
- ↑ "Uma's hope" இம் மூலத்தில் இருந்து 1 நவம்பர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061101103430/http://www.indiaglitz.com/channels/tamil/article/20029.html.
- ↑ "Behindwoods- Thendral Uma Interview:". http://www.behindwoods.com/features/Interviews/Interview1/html/thendraluma_interview.html.
- ↑ "Another star daughter enters Kollywood" இம் மூலத்தில் இருந்து 29 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100529194909/http://www.indiaglitz.com/channels/tamil/article/57307.html.
- ↑ "Actress Uma's Wedding Reception" இம் மூலத்தில் இருந்து 21 ஜூன் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060621041423/http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/9871.html.