உபதேச ரத்தின மாலை
உபதேச ரத்தின மாலை 15-ஆம் நூற்றாண்டு நூல்.
மணவாள மாமுனிகள் பாடிய மூன்று தமிழ்நூல்களில் ஒன்று.
திருவாய்மொழிப் பிள்ளை எனச் சிறப்புப்பெயர் பெற்ற திருமலையாழ்வார் மணவாள மாமுனிகளின் ஆசிரியர்.
அவர் தமக்குச் சொல்லித்தந்த நெறிமுறைகளைப் பலரும் தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது இந்த நூல்.
இதில் 71 வெண்பாக்கள் உள்ளன.
இந்த நூலில் உள்ள செய்திகள்
- ஆழ்வார்கள் தோன்றிய மாதம், நாள், ஊர்
- நாதமுனி முதலான ஆசாரியர் செய்த விரிவுரைகள்
இதனால் ஆசாரிய பரம்பரை விளங்குகிறது. இதனை ஒரு வரலாற்றுநூல் என்றுகூடச் சொல்லலாம்.
போற்றுதல்
- பிள்ளை லோகாசாரியார் செய்த ‘ஸ்ரீ வசன பூஷணம்’ என்னும் நூலை இந்நூல் பல இடங்களில் போற்றுகிறது.
தமிழ்ப்படுத்தல்
- சிஷ்யன் என்னும் சொல்லைச் சிக்கன் என எழுதுகிறார். [1]
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- ↑ பாடல் 65