உபதேச மாலை
உபதேச மாலை என்பது சிவஞான வள்ளல் பாடிய 20 நூல்களில் ஒன்று. இந்த நூலில் 100 வெண்பாக்கள் உள்ளன.
- கொல்லா விரதம் சைவம் என இது குறிப்பிடுகிறது.
- ’ஆசாரியன்’ என்னும் சொல்லை இந்த நூல் ‘ஆசாரிக்கும் தன்மை உடையவன்’ என விளக்குகிறது. ஆசாரித்தல் என்பது ஆசாரங்களைக் கடைப்பிடித்தல். ஆசாரம் என்பது வாழ்க்கைக்கு ஆசாக உள்ள பழக்க வழக்கங்கள். ஆசு என்பது தச்சர் மரப்பொருள்களை இணைக்கும்போது செங்கோணத்தில் அமையப் பயன்படுத்தும் ஆப்பு.
- பற்று அற்று முத்தி பெற்றவர்கள் என இந்த நூல்
|
|
|
|
ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
இது 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005