இலங்கை வரலாற்று நூல்கள்

இலங்கையின் புராதன வரலாற்றினை அமைப்பதற்கு ஆதாரமான நூல்கள்

தீபவம்சம்

இலங்கையின் வரலாற்றுத் தகவல்களை தொகுத்துத் தரமுற்பட்ட முதலாவது நூல் இதுவாகும். நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட இந்நூல் பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளது. மகாவம்சத்திற்கு முற்பட்டது. அரசியல் நிகழ்வுகளைவிட பௌத்தமத தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. நம்பகமற்ற, ஒழுங்கமைக்கப்படாத நூலாகும்.

மகாவம்சம்

இலங்கை வரலாற்றைச் சிறந்த முறையில் தொகுத்துத் தந்த முதலாவது நூல் இதுவாகும். 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாநாம தேரர் என்ற புத்த பிக்குவால் இயற்றப்பட்டது. கி.மு 6 - கிபி 4 ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் பௌத்த, அரசியல், பிறநாட்டவர் படையெடுப்பு, நீர்வள நாகரீகம் போன்ற தகவல்களைத் தருகிறது. இந் நூல் தீபவம்சம், கர்ண பரம்பரை கதைகளை அடிப்படையாக வைத்து முழுவதும் பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதன் பல பகுதிகள் நடைமுறைச் சாத்தியமற்ற, கட்டுக் கதைகளைக் கொண்டுள்ளது. மகாவம்சத்தின் தொடர்ச்சியே சூளவம்சம் ஆகும்.

சூளவம்சம்

இந் நூல் 4-16 ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்களை கூறும் வரலாற்றுத் தொகுப்பாகும். முழுவதும் பாளி மொழியில் எழுதப்பட்ட இந்நூல் மகாவம்சத்தின் தொடர்ச்சியாகும். 13 ம் நூற்றாண்டில் தர்மகீர்த்தி தேரவால் எழுதத் தொடங்கப்பட்டு பின் அவரது சீடர்களால் எழுதப்பட்டது.

ராஜவளிய

இது இலங்கை வரலாற்றைத் தொகுத்து தரும் மற்றுமொரு நூலாகும். 17ம் நூற்றாண்டில் இருந்து பிரித்தானிய காலனியாதிக்க காலம் வரையில் நிகழ்ந்த சம்பவங்களை இந் நூல் எடுத்துரைக்கிறது. முழுவதும் சிங்கள மொழியில் எழுதப்பட்ட இந் நூலில் பௌத்த நிகழ்வுகளை விட அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

"https://tamilar.wiki/index.php?title=இலங்கை_வரலாற்று_நூல்கள்&oldid=15536" இருந்து மீள்விக்கப்பட்டது