இலக்குமி தோத்திரம்

பிற்காலப் பாண்டி நாட்டில் தென்காசி அரசன் சீவலராமன் என்னும் அதிவீரராம பாண்டியன் இயற்றிய நுல்கள் நான்கு.

நைடதம்,
காசி கண்டம்,
கூர்ம புராணம்,
வெற்றிவேற்கை

இவற்றில் காசி கண்டம் என்னும் நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில் தமிழ்முனிவர் திருமகளை வணங்குவதாக 6 பாடல்கள் உள்ளன. இதன் சிறப்பு கருதி இந்த ஆறு பாடல்களையும் தனி நூலாக அச்சிட்டுள்ளனர்.[1]

  • ஒரு பாடல்
கொழுதியிசை அளிமுரளும் தாமநறும் பொகுட்டிலுள்ள கொள்கை யேபோல்
மழைஉறழும் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகும் மானே
முழுதுலகும் இனிதீந்த அருட்கொம்பே கரகமலம் முகிழ்ந்து நாளும்
கழிபெருங்,கா தலில்,தொழுவோர் வினைதீர அருள் கொழிக்கும் கமலக் கண்ணாய்

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு

  1. காசிகண்டம் பாடல் 26 முதல் 31
"https://tamilar.wiki/index.php?title=இலக்குமி_தோத்திரம்&oldid=17151" இருந்து மீள்விக்கப்பட்டது