இருசமய விளக்கம்
இருசமய விளக்கம் என்னும் நூல் அரிதாசர் என்பவரால் பாடப்பட்டது. சைவம், வைணவம் ஆகிய இரு சமயக் கருத்துகளை விளக்கவந்த நூல் இது. எனினும் இதில் சைவக் கருத்துகள் மறுக்கப்ப்படு வைணவக் கருத்துகள் நிலைநாட்டப்படுகின்றன. [1]
- சூழல்
- கி. பி. 1100-க்குப் பிறகு வைணவ சமயம் மேலோங்கியது.
- மேலோங்கிய நூல்களில் பெரும்பான்மை மணிப்பிரவாள நடையில் அமைந்தவை.
- அவை அந்தணர்களால் செய்யப்பட்டவை.
- அரிதாசர் தமிழில் நூல் செய்தார்.
- வேளாளர்
- நூலைப் பற்றிச் சில குறிப்புகள்
- இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் கொண்டவை.
- சிவபுராணக் கருத்துக்கள் மறுக்கப்பட்டுள்ளன.
- நூலின் ஓட்டம்
- ஆரணவல்லி – திருமால் அடிமை
- ஆகமவல்லி – சிவனடிமை
- இருவரும் நீராடி மீண்டு இறைவனை வழிபடும்போது உரையாடுவதாக நூல் செல்கிறது.
ஆகமவல்லி பாட்டு
- ஆல மரத்தை அடக்கிய வித்தென அண்டமெலாம் எளிதில்
- சால அடக்கி அளிப்பவனே திகழ் சந்திர சேகரனே
- மால் அயனுக்கும் அனந்த மறைக்கும் நல் வானவருக்கும் எலாம்
- மூலம் எனத்தகு காரணனே நம! முக்கண்ணனே நம!
ஆரணவல்லி பாட்டு
- அந்தமும் ஆதியும் ஆகிய பேரொளி ஆம் உனை மா மறையால்
- முந்து உணர்வோர் சிலர் அல்லது மாறுகொள் மோகன நூல் வழி நீ
- தந்த பெருஞ் சமயங்களையே பர தத்துவம் என்று உணர
- புந்தி மயக்கிடும் அச்சுதனே! பரிபூரணனே! நமவே!
- வேத வகைகள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.
- இந்த நூல் 16ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.