இரா. பிரியா

இரா. பிரியா அல்லது பிரியா ராஜன் (R. Priya / Priya Rajan) (பி. 1993/1994) என்பவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு அரசியலரும் தற்போதைய பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைவரும் ஆவார்.[1]

இரா. பிரியா
சென்னை மாநகராட்சித் தலைவர் (மேயர்)
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
4 மார்ச் 2022
துணை மு.மகேஷ்குமார்
முன்னவர் சைதை சா. துரைசாமி
பெருநகர சென்னை மாநகராட்சி உறுப்பினர்
(கவுன்சிலர்)
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 மார்ச் 2022
தொகுதி கோட்டம் 74
தனிநபர் தகவல்
பிறப்பு 1993 (அ) 1994
(அகவை 28)
மதராஸ் (தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி Flag DMK.svg திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) கே. ராஜா
பிள்ளைகள் 1 (மகள்)
பெற்றோர் பெரம்பூர் இரா. ராஜன் (தந்தை)
இருப்பிடம் மங்களபுரம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலைக் கல்லூரி, சென்னை
பணி அரசியலர்

தொடக்க வாழ்க்கை

வடசென்னை வாசியான இவர், ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலைக் கல்லூரியில் முதுகலை வணிகவியல் பட்டம் பெற்றவர்.[2]

அரசியல்

2022 உள்ளாட்சித் தேர்தல்

பிரியா, பிப்ரவரி 2022-இல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு. வி. க. நகரிலுள்ள 74-ஆவது கோட்டத்தில் வென்றார் .

சென்னை மாநகராட்சித் தலைவர் பதவியில் (2022-)

பிரியா சென்னை மாநகராட்சி தலைவரான முதல் இளையவரும், பட்டியலினப் பெண்ணும் ஆவார், தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோருக்குப் பின் மூன்றாவது பெண் மாநகராட்சித் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.[3][4][5]

சென்னையின் தண்ணீர் வடிகால் சிக்கலைத் தீர்ப்பது தன் முன்னுரிமைகளுள் ஒன்று என்பதாக பிரியா கூறியுள்ளார்.[2]

குடும்பம்

பிரியா, 1989, 1996 ஆம் ஆண்டுகளில் பெரம்பூர் தொகுதியில் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சேர்ந்த செங்கை சிவம் என்பாரின் பேத்தியாவார். பிரியாவின் தந்தை இராஜன் வட சென்னையின் திமுக பகுதிப் பொறுப்பாளராக உள்ளார்.[6]

இவரின் கணவர் கே. இராஜா பொறியியல் பட்டதாரி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்.[7] திரு. வி. க. நகரின் திமுக பகுதிச் செயலாளராக உள்ளார். இவ்விணையருக்கு ஒரு மகள் உள்ளார்.[8]

மேற்கோள்கள்

  1. https://www.thehindu.com/news/cities/chennai/r-priya-28-elected-unopposed-is-now-chennais-mayor/article65189484.ece
  2. 2.0 2.1 "DMK's R Priya to make history as Chennai's first SC woman mayor". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
  3. https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-mayor-r-priya
  4. https://www.hindutamil.in/news/tamilnadu/773824-r-priya-takes-over-as-chennai-mayor-aiadmk-did-not-participate-in-indirect-elections-1.html
  5. https://www.india.com/tamil-nadu/meet-r-priya-chennais-youngest-and-first-ever-dalit-woman-to-take-charge-as-mayor-5268336/
  6. https://timesofindia.indiatimes.com/city/chennai/priya-rajan-dmks-mayoral-candidate-in-chennai-reveals-what-her-priorities-are/articleshow/89969329.cms
  7. https://www.dailythanthi.com/News/TopNews/2022/03/04134304/I-will-prioritize-and-solve-basic-problems-Interview.vpf
  8. "மாநகராட்சி... ஆளப்போகும் மகளிர்!". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-03-09.
முன்னர்
சைதை சா. துரைசாமி
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

2022-முதல்
பின்னர்
-
"https://tamilar.wiki/index.php?title=இரா._பிரியா&oldid=125835" இருந்து மீள்விக்கப்பட்டது