இராமாயண வெண்பா

இராமாயண வெண்பா பதினைந்தாம் நூற்றாண்டு தமிழ்க்காப்பியகளில் ஒன்று.

பாரதவெண்பா என்னும் நூலைப் போன்றது. இதன் ஐந்து பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. வெண்பா யாப்பில் காப்பியம் செய்துகாட்டிய புகழேந்தி வழியைப் பின்பற்றிப் பாடப்பட்ட நூல் இராமாயண வெண்பா.

பலதிரட்டு என்னும் சுவடியில் சென்னை அரசாங்க கையெழுத்துப் புத்தகசாலையில் உள்ளது ‘இராமாயண வெண்பா’ என்னும் தலைப்பின்கீழ் நான்கு வெண்பாக்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று:

சனகன் மொழிகேட்டுத் தவமுனிவன் சொன்னான்
தினகரனார் தெய்வக் குலத்தோன் – மனமகிழ
வந்தசிறுச் சேவகனை மன்னா அறிவீரோ
இந்தவகை என்நினைத்தீர் என்று.

வீரசோழிய உரையில் மூன்று வெண்பாக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று

மன்னன் தயரதற்கு வாய்த்த மருமகளாய்
மன்னன் சனகன் மகளாகி – மன்னனிரா
மன்தாரம் ஆகியபொன் மாதகல்நாண் மீண்டெய்தாள்
என்நலார் துன்புறார் ஈங்கு.

இவற்றில் தொடர்ச்சி காணப்படவில்லை. உதிரிப் பாடல்களாகவே உள்ளன.

இதன் காலம் 15ஆம் நூற்றாண்டு என்பர்.[1]

அடிக்குறிப்பு

  1. மு. ராகவையங்கார் ஆராய்ச்சித் தொகுதி, பக்கம் 19

கருவிநூல்

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
"https://tamilar.wiki/index.php?title=இராமாயண_வெண்பா&oldid=17147" இருந்து மீள்விக்கப்பட்டது