இராமர் பாதம்
இராமர் பாதம் அல்லது கந்த மாதன பர்வதம், இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்திற்கு வடக்கில் 2.5 கி.மீ, தொலைவில் இராமர் பாதம் எனப்படும் கந்த மாதன பர்வதம் என்ற மணல் குன்று உள்ளது. இராமர் கடலைக் கடந்து இலங்கை செல்லுமுன், இங்குள்ள குன்றில் தங்கினார் என்று தல புராணம் கூறுகிறது. இக்குன்றின்மேல் அமைந்துள்ள மண்டபத்தில் ஸ்ரீராமரின் பாதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் அமைந்துள்ளது.[1]. இராமர் பாதம் சன்னதி எதிரில் உள்ள கருடனுக்கு சிறு சன்னதி அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- இராமர் பாதம் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்