இராசாவலிய

இராசாவலிய (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) என்பது ஒரு பண்டைய இலங்கை வரலாற்று நூல் ஆகும்.[1] விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பற்றி தொடர்ச்சியாக எழுதப்பட்ட இலக்கிய மூலாதாரமான இது சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது.[2] இராஜாவலிய அரசியல் செய்திகளுக்கே முதலிடம் கொடுத்துள்ளது. சமயச் செய்திகளை விளக்கவில்லை. இலக்கிய நடையைத் தவிர்த்து பொதுமக்களைக் கவரும் வண்ணம் எளிய நடையில் இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக கி.பி. 1359 - ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தைப் பற்றி அறிய இந்நூல் பெரிதும் பயன்படுகிறது. இது பலரால் எழுதப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இராசாவலிய&oldid=15530" இருந்து மீள்விக்கப்பட்டது