இராசராச விசயம்

இராசராச விசயம் என்னும் நூல் தஞ்சை நகரிலிருந்து அரசாண்ட முதலாம் இராசராசன்மீது பாடப்பட்டது. இதனை நாராயணன் பட்டாதித்தன் [1] எனும் புலவர். இந்தப் புலவர் 'சவர்ணன்' என்னும் சாதியினர். சவர்ணன் குலத்தவர்கள் அக்காலத்தில் சிறந்த மருத்துவர்களாகத் திகழ்ந்தனர். [2] புலவர் பட்டாதித்தன் தான் செய்த நூலை விழாக் காலங்களில் படிப்பதற்காக அரசன் இராசேந்திரன் நிலதானம் வழங்கியிருந்தான். திருப்பூந்துருத்தி [3] கோயில் கல்வெட்டு இதனைக் குறிப்பிடுகிறது. அவையில் படிக்கப்பட்டதால் இது தமிழ்நூல். இதில் இராசராசனது வெற்றிச் செயல்கள், வீரம், செங்கோன்மை, கொடை முதலான செய்திகள் இடம் பெற்றிருந்தன.

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. பட்டு என்பது ஊர். அவ்வூரில் வாழ்ந்தவன் பட்டாதித்தன்
  2. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 11 ஆம் நூற்றாண்டு, 2005, பக்ககம் 314
  3. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இங்குக் கோயில் கொண்டுள்ள சிவபெருமானை அப்பர், அருணகிரி நாதர், இராமலிங்க சுவாமிகள்]] ஆகியோர் பாடியுள்ளனர்.
"https://tamilar.wiki/index.php?title=இராசராச_விசயம்&oldid=17143" இருந்து மீள்விக்கப்பட்டது