இரகுவண்ணன்
இரகு மணிவண்ணன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், அவர். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். இவர் நடிகர் மணிவண்ணனின் மகனாவார். இவர் மாறன் (2002), நாகராஜ சோழன் எம். ஏ., எம். எல். ஏ (2013) உள்ளிட்ட படங்களில் தோன்றியுள்ளார்.
இரகு மணிவண்ணன் | |
---|---|
பிறப்பு | 24 ஏப்ரல் 1984 தமிழ்நாடு, சென்னை |
மற்ற பெயர்கள் | இராகவேந்திரன், இரகுவண்ணன் |
பணி | நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2002 - தற்போது வரை |
பெற்றோர் | மணிவண்ணன் & செங்கமலம் |
வாழ்க்கைத் துணை | அபிகைல் மணிவண்ணன் |
பிள்ளைகள் | ஆத்விக் & ஆதித்யன் |
தொழில்
சத்யராஜ் முதன்மை வேடத்தில் நடித்த மாறன் (2002) படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.[1] பின்னர் அவர் பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகளைப் பெறவில்லை. மேலும் குறைந்த செலவில் தயாரிக்கபட்ட காதல் வளர்த்தேன் உள்ளிட்ட இரண்டு படங்களில் பணியாற்றினார். அதில் இவர் மனோஜ் பாரதிராஜா மற்றும் குணால் ஆகியோருடன் பணிபுரிந்தார். 2013 ஆம் ஆண்டில், ரகு மணிவண்ணன் தனது தந்தை இயக்கிய 50 வது படமான நாகராஜ சோழன் எம். ஏ., எம். எல். ஏ. வில் சத்தியராஜுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் தனது தந்தையின் அடுத்த படமான தாலாட்டு மச்சி தாலாட்டு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் 2013 சூனில் மணிவண்ணன் இறந்த பிறகு படம் கைவிடப்பட்டது செய்யப்பட்டது [2][3]
2015 பிப்ரவரியில், ரகு மணிவண்ணன் தனது தந்தையின் நூறாவது நாள் (1984) படத்தின் மறு ஆக்கத்தை இயக்கும் பணியில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தார். நவீன கால பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு படத்தை எழுதத் தொடங்கினார். இப்படத்தில் நடராஜன் சுப்பிரமணியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
ரகு மணிவண்ணன் 16 செப்டம்பர் 2013 அன்று லண்டனைச் சேர்ந்த அபிகைல் மானுவல்ராஜ் என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு 14 நவம்பர் 2016 அன்று பிறந்த ஆத்விக் பெஞ்சமின் , 13 மே 2018 அன்று பிறந்த ஆதித்யன் பென்னையா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்..[சான்று தேவை]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2002 | மாறன் | சுதந்திராம் | |
2008 | தொடக்கம் | வாஞ்சிநாதன் | |
2010 | கோரிப்பாளையம் | அழகப்பன் | |
2011 | தமிழ் தேசம் | ||
2013 | நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ. | கங்கைகொண்டான் |
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2003-02-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030210214543/http://thehindu.com/thehindu/fr/2002/09/27/stories/2002092701040200.htm.
- ↑ http://www.kollyinsider.com/2013/03/manivannans-son-raghuvannan-engaged-to.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180811064751/http://www.sify.com/movies/manivannan-was-a-father-figure-komal-sharma-news-national-ngppOdcejjcsi.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-02-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150219204453/http://www.sify.com/movies/manivannan-s-nooravathu-naal-to-be-remade-news-tamil-pcrjIzegechjd.html.