ஆ. இரா. வேங்கடாசலபதி
ஆ. இரா. வேங்கடாசலபதி (A. R. Venkatachalapathy) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆய்வாளர்களுள் ஒருவர். இவர் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பதிப்பு வரலாறு பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். புதுமைப்பித்தனின் எழுத்துக்களைச் செம்பதிப்பாகத் தொகுத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் வரலாற்று, பண்பாட்டுத்துறைக்கு முக்கியமான 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.[1]
ஆ. இரா. வேங்கடாசலபதி | |
---|---|
தேசியம் | இந்தியா |
கல்வி | முனைவர் |
கல்வி நிலையம் | சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் |
இணையதளம் | |
www |
விருதுகள்
- 2021ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது[2]
- கோயம்புத்தூர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் இவருக்கு 2023 ஆண்டிற்கான டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருது
இவரது நூல்கள்
- பின்னி ஆலை வேலை நிறுத்தம்
- அந்தக் காலத்தில் காப்பி இல்லை
- நாவலும் வாசிப்பும்
- புதுமைப்பித்தன் கதைகள் (தொகுப்பாளர்)
- புதுமைப்பித்தன் கட்டுரைகள் (தொகுப்பாளர்)
- In Those Days There Was No Coffee
- பாரதியின் சுயசரிதைகள்
- பாரதி; கவிஞனும் காப்புரிமையும் – பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு [3]
- சென்றுபோன நாட்கள் - பதிப்பாசிரியர்
- Province of the Book
- இன்று துயர்மிகு வரிகளை நான் எழுதலாம் பாப்லோ நெருடா கவிதைகள் (மொழிபெயர்ப்பாளர்)
- Chennai not Madras
மேற்கோள்கள்
- ↑ "தமிழ் இதழியல்: மீண்டு வரும் நாட்கள்". இந்து தமிழ் (நாளிதழ்). 18 ஆகஸ்ட் 2015. https://www.hindutamil.in/news/opinion/columns/52344-.html. பார்த்த நாள்: 23-10-2021.
- ↑ "பேராசிரியர் சலபதி, கே.சந்துரு உள்ளிட்ட 4 பேருக்கு ‘இயல்’ விருதுகள் அறிவிப்பு!". இந்து தமிழ் (நாளிதழ்). 19 மே 2022. https://www.hindutamil.in/news/world/801861-professor-a-r-venkatachalapathi-and-judge-k-chandru-got-iyal-awards-4.html. பார்த்த நாள்: 20-05-2022.
- ↑ "பாரதி கவிஞனும் காப்புரிமையும் -யூடியூப் காணொலி". https://www.youtube.com/watch?v=C-i-b7yHg6Y. பார்த்த நாள்: 23 அக்டோபர் 2021.