ஆர். லீமா ரோஸ்
ஆர். லீமா ரோசு (R. Leema Rose) இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இடது சாரி அரசியல்வாதி. 2006 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
இவர் இளங்கலை அறிவியல் மற்றும் இளங்கலை கல்வியில் பட்டம் பெற்ற பட்டதாரி ஆவார். 1989 ஆம் ஆண்டு முதல் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராவார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டார்.[2] இவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக இருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-24.
- ↑ "Profile of CPI(M) Candidates for Tamilnadu Assembly Elections: 2011". Communist Party of India (Marxist). பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2017.
வெளி இணைப்புகள்
1. Affidavit submitted along with application for the 2006 TN State elections பரணிடப்பட்டது 2014-10-22 at the வந்தவழி இயந்திரம்