ஆத்மா (திரைப்படம்)

ஆத்மா (Athma) பிரதாப் கே. போத்தன் இயக்கிய 1993 தமிழ் மொழி திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ராம்கி , ரஹ்மான் , நாசர் (நடிகர்) , கௌதமி மற்றும் கஸ்தூரி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜிதா ஹரி தயாரித்த இந்தத் திரைப்படம், இளையராஜாவால் இசை அமைக்கப்பட்டு, ஜூலை 30, 1993 ஆம் தேதி வெளியிடப்பட்டது.[1][2]

ஆத்மா
ஆத்மா
இயக்கம்பிரதாப் கே. போத்தன்
தயாரிப்புஅஜிதா ஹரி
மூலக்கதைThe Miracle
படைத்தவர் Irving Wallace
திரைக்கதைபிரதாப் கே. போத்தன்
இசைஇளையராஜா
நடிப்புராம்கி
ரஹ்மான்
நாசர்
கௌதமி
கஸ்தூரி
வினோதினி
வாணி
விஜயகுமாரி
ரியாஸ் கான்
செந்தில்
ஒளிப்பதிவுமது அம்பத்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்சுப்ரியா இன்டெர்நேஷனல்
வெளியீடுசூலை 30, 1993 (1993-07-30)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

  • ராம்கி - சரவணன் / விக்னேஷ்
  • ரஹ்மான் - ராகு
  • நாசர் - ஹரி
  • கௌதமி - திவ்யா
  • கஸ்தூரி - உமா
  • வினோதினி - பத்மா
  • வாணி
  • விஜயகுமாரி - குகை அம்மா
  • ரியாஸ் கான் - நவீன்
  • செந்தில் - மெய்யப்பன்

கதைச்சுருக்கம்

நாத்திகரான ரகு (ரஹ்மான்) ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர். அவரும் அவரது தந்தையும் (விஜய்சந்தர்) ஆராய்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்திற்கு சென்றனர். ஆய்வின் போது, அவரது தந்தை மர்மமான முறையில் மறைந்து விடுகிறார். நாககாளி அம்மன் ஆலயத்தில் பௌர்ணமி அன்று, தெய்வம் பூமிக்கு வரும் என்றும், அந்த நேரத்தில் நாககாளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியின் கீழ் முற்றிலும் மூழ்கும் மக்களுக்கு எந்த வியாதியும் குணமாகும் என்றும் ரகுவிற்கு தெரியவருகிறது. ரகுவின் சக ஊழியர் பத்மா (வினோதினி) தன் தோழி கண்ணில்லா திவ்யாவிற்கு (கௌதமி) சொல்ல, செய்தி பொதுமக்களிடம் பரவிவிடுகிறது. புற்றுநோயின் இறுதி கட்டத்தில் நவீனை (ரியாஸ் கான்) பத்மா காதல் செய்கிறாள்.

விரைவில், சரவணன் (ராம்கி) தலைமையில் ஒரு நாத்திகர் பயங்கரவாதக் குழு, அந்த ஆலயத்தை அழிக்க முயல்கிறது. தனது தங்கையையும் மைத்துனரையும் பறிகொடுத்த ஒரு துயரமான அனுபவம் சரவணனுக்கு உண்டு. இதற்கிடையில், திவ்யாவின் சகோதரர் போலீஸ் அதிகாரி ஹரி (நாசர்), பயங்கரவாத குழுவை ஒழித்துக்கட்டும் குறிக்கோளுடன் இருக்கிறார். பத்மா நாககாளி அம்மன் கோவில் மகிமையை நம்புகிறாள், அதனால் அவள் நவீனை திருமணம் செய்துகொண்டு கோவிலுக்கு செல்கிறாள். திவ்யா தன் பார்வையை திரும்பப்பெற, ஹரி அவளுடன் வர கட்டாயப்படுத்துகிறாள். ஹரியும் ஒப்புக்கொள்கிறார். கடவுளின் வருகைக்கு சில நாட்களுக்கு முன்பாக, நாககாளி அம்மன் கோவில்யில் கூட்டம் அதிகரிக்க, பின்னர் என்ன நடந்தது எனபது மீதிக் கதையாகும்.

இசை

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். இதில் உள்ள 6 பாடல்களின் வரிகளை எழுதியது வாலி ஆவார்.[3][4]

ட்ராக் பாடல் பாடகர் (கள்)
1 இன்னருள் தாரும் டி. என். சேஷகோபாலான்
2 கண்ணாலே காதல் கவிதை கே.ஜே.ஏசுதாஸ், எஸ். ஜானகி
3 நினைக்கின்ற பாதையில் எஸ். ஜானகி
4 வராயோ உனக்கே சரன் மனோ
5 விடியும் பொழுது மனோ
6 விளக்கு வைப்போம் எஸ். ஜானகி

வரவேற்பு

இந்த படம், "இது போன்ற ஒரு திரைப்படத்தை முயற்சிக்க தைரியம் தேவை, மற்றும் பிரதாப்பின் கதை உங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது". என்ற நல்ல விமர்சனத்தைப் பெற்றது.[2]

மேற்கோள்கள்

  1. "Aathma (1993) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-31.
  2. 2.0 2.1 A plot that's different from the norm. https://news.google.com/newspapers?id=JtZOAAAAIBAJ&sjid=8BMEAAAAIBAJ&hl=en&pg=3726%2C1643607. பார்த்த நாள்: 2013-12-31. 
  3. "MusicIndiaOnline - Aathma(1993) Soundtrack". mio.to. Archived from the original on 2014-01-01. பார்க்கப்பட்ட நாள் 2013-12-31.
  4. "Aathma Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-31.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆத்மா_(திரைப்படம்)&oldid=30527" இருந்து மீள்விக்கப்பட்டது