ஆதித்ய வர்மா
வர்மா (Varmaa)/ஆதித்ய வர்மா என்பது ஒரு தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை முகேஷ் மேத்தாவின் இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் வழியாக துருவ் விக்ரம் அறிமுகமாகிறார். இப்படமானது தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டி (2017) என்ற படத்தின் மறு ஆக்கமாகும். இப்படமானது முதலில் பாலாவால் இயக்கப்பட்டு, 2018 மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது; இருப்பினும் மூலப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் இப்படத்தில் இடம்பெறாமல் போனதற்காக ஈ4 எண்டர்டெயின்மெண்ட் 2019 பெப்ரவரியில், தன் அதிருப்பதியைத் தெரிவித்தது. மேலும் படத்தை வேறு இயக்குநரைக் கொண்டு பழைய குழுவில் துருவைமட்டும் கொண்டும், புதிய குழுவினரைக் கொண்டு மறுபடப்பிடிப்பு நடத்த உள்ளதாக அறிவித்தது. 2019 நவம்பரில் படத்தின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது.எனினும் பாலாவின் வர்மா நெட்ப்ளிக்ஸ்ல் வெளியாகவுள்ளது.
ஆதித்ய வர்மா | |
---|---|
சுவரொட்டி | |
தயாரிப்பு | முகேஷ் மேத்தா |
இசை | ராடன் |
நடிப்பு | துருவ் விக்ரம் |
கலையகம் | இ4 எண்டர்டெயின்மெண்ட் |
விநியோகம் | சக்தி ஃபிளிம் பேக்டரி |
வெளியீடு | நவம்பர் 21, 2019(worldwide) நவம்பர் 22, 2019 (India) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தயாரிப்பு
வளர்ச்சி
வர்மா படமானது தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டி (2017) படத்தின் தமிழ் மறு ஆக்கமாகும். இப்படத்தை முகேஷ் மேத்தாவின் இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் இயக்குநராக பாலா நியமிக்கப்பட்டார். படத்துக்கான உரையாடலை ராஜு முருகன் எழுதினார்.[1] ஒளிப்பதிவுக்கு எம். சுகுமார் நியமிக்கப்பட்டார்.[2] மேத்தா குறிப்பிடும்போது இப்படமானது மூலத் தெலுங்கு படத்தை விட 20 நிமிடங்கள் குறுகியதாக இருக்கும் என்றார்.[3] பாலாவின் நாச்சியார் படத்துக்கு முன்னதாக சத்ய சாய்யா திரைப்பட தொகுப்பாளராக நியமிக்கப்பட்டார்.[4]
நடிகர்கள்
வர்மா படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் அறிமுகமாகிறார்.[1] முதன்மை பெண் பாத்திரத்துக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த வடிவழகியான மேகா நடித்தார்.[5] மேலும் முன்னணி பாத்திரத்தில் ஆகாஷ் பிரேம்குமார் நடிக்க,[6] பிற பாத்திரங்களில் ஈஸ்வரி ராவ்,[7] ரைசா வில்சன்,[8] சந்த்ரா அமே ஆகியோர் நடித்தனர்.[9]
படப்பிடிப்பு
படத்தின் முதன்மைப் படப்பிடிப்பானது 2018 மார்ச்சில் நேபாளத்தின், காட்மாண்டில் துவங்கியது.[1] ஒரு வாரத்திற்கு பிறகு முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட கடப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டது.[10] தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தின் காரணமாக படப்பிடிப்பு கொஞ்சகாலம் நிறுத்திவைக்கப்பட்டது. வேலைநிறுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டது.[11] இறுதிக்கட்டப் படப்பிடிப்பானது திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டது.[6] 2018 செப்டம்பரில் முதன்மைப் படப்பிடிப்புப் பணிகள் முடிந்தன.[12]
2019 பெப்ரவரி 7 அன்று, இ4 எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனமானது பத்திரிகைகளில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அவர்கள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வர்மா திரைப்படம் எங்களுக்கு திருப்தி இல்லை, என்பதால் இப்பதிப்பை வெளியிட விரும்பவில்லை என்றது. இதற்கு பதிலாக பழைய குழுவில் உள்ள துருவை மட்டும் கொண்டு ஒரு புதிய நடிகர்கள் மற்றும் புதிய குழுவோடு இப்படத்தை மீண்டும் மறு படப்பிப்பு செய்ய உள்ளதாக அறிவித்தது.[13] முழு படப்பணிகளும் முடிந்த நிலையில் படத்தில் திருப்தி இல்லை என்று மீண்டும் படப்படிப்பு நடத்துவதாக தயாரிப்பு நிறுவனம் குறிப்பிடுவது தமிழ்த் திரைப்பட உலகில் இதுவே முதல் நிகழ்வாகும்.[14]
இசை
அசல் தெலுங்கு படத்துக்கு இசையமைத்த ராடன் இப்படத்தின் இசையமைப்பாளராவார். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் குமார் ஆகியோரை தன் படங்களுக்கு இசைக்கு பயன்படுத்திய இயக்குனர் பாலாவுடன் இவர் சேரும் முதல்படமாக இது இருந்தது.[15] வைரமுத்து எழுதிய வரிகளில் விக்னேஷ் ஜி பாடிய ஒரு பாடலான "வானோடும் மண்னோடும்" என்ற ஒரு பாடல் 2018 டதிசம்பர் 27 அன்று வெளியிடப்பட்டது.[16]
வெளியீடு
வர்மா படத்தை 2019 சூனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.[13] இப்படத்தின் விநியோக உரிமையை தமிழ் நாட்டில் ஷக்தி திரைப்பட ஃபாக்டரி வாங்கியது.[17]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Varma, Arjun Reddy Tamil remake, starts rolling". 3 March 2018. https://www.hindustantimes.com/regional-movies/varma-arjun-reddy-tamil-remake-starts-rolling/story-8hDVHCwLT59xj9tK1DfyaK.html.
- ↑ "Varma, Tamil remake of Arjun Reddy, to feature debutante Megha Choudhary opposite Dhruv Vikram". 7 July 2018.
- ↑ "It's raining remakes in Kollywood". 9 August 2018. https://www.thehindu.com/entertainment/movies/kaatrin-mozhi-varma-raining-remakes-in-kollywood/article24643041.ece.
- ↑ Sathish Suriya [editorsuriya] (23 September 2018). "#Varma my second film with the legend #bala sir. Enjoyed working on Varma. #E4Entertainment and Happy Birthday #DhruvVikram" (Tweet).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Model Megha to debut opposite Dhruv in 'Varma'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 July 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/model-megha-to-debut-opposite-dhruv-in-varma/articleshow/64851284.cms.
- ↑ 6.0 6.1 Balaji, Gautham (8 August 2018). "City boy makes it big with Bala's next". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/080818/city-boy-makes-it-big-with-balas-next.html.
- ↑ Rajendran, Gopinath (5 June 2018). "Easwari Rao: I thought I was called to play Rajini sir's mother". Cinema Express. http://www.cinemaexpress.com/stories/interviews/2018/jun/05/easwari-rao-i-thought-i-was-called-to-play-rajini-sirs-mother-6356.html.
- ↑ "Bala's Varma gets a heroine". Cinema Express. 4 July 2018. http://www.cinemaexpress.com/stories/news/2018/jul/04/balas-varma-gets-a-heroine-6819.html.
- ↑ "The luck factor". Deccan Chronicle. 22 November 2018. https://www.deccanchronicle.com/entertainment/mollywood/221118/the-luck-factor.html.
- ↑ "'Arjun Reddy' Tamil remake: Makers of 'Varma' complete first schedule in Nepal". 9 March 2018. https://www.thenewsminute.com/article/arjun-reddy-tamil-remake-makers-varma-complete-first-schedule-nepal-77722.
- ↑ "Director Bala resumes 'Varma' shoot". 24 April 2018.
- ↑ "Dhruv Vikram wraps up ‘Varma’". 17 September 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/dhruv-vikram-wraps-up-varma/articleshow/65854669.cms.
- ↑ 13.0 13.1 "E4 Entertainment not happy with Bala's Varmaa; to re-shoot the Arjun Reddy remake with a new team". 7 February 2019. https://www.cinemaexpress.com/stories/news/2019/feb/07/e4-entertainment-not-happy-with-of-balas-varmaa-to-re-shoot-the-arjun-reddy-remake-with-a-new-team-10004.html.
- ↑ "Varmaa: Tamil remake of cult Telugu film Arjun Reddy dropped; producers and director Bala at loggerheads". 7 February 2019.
- ↑ "Music director Radhan roped in for Bala's ‘Varma’". 24 July 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/music-director-radhan-roped-in-for-balas-varma/articleshow/65114742.cms.
- ↑ "வானோடும் மண்ணோடும்... பாலாவின் 'வர்மா' பட பாடல் ரிலீஸ் - வீடியோ". 27 December 2018.
- ↑ "'Varma': Actor Suriya launches the trailer of Bala's next". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 January 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/varma-actor-suriya-launches-the-trailer-of-balas-next/articleshow/67456046.cms.