ஆசை தம்பி

ஆசை தம்பி (Aasai Thambi) என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். செந்தில்நாதன் எழுதி இயக்கிய இப்படத்தில் அருண் பாண்டியன், அப்பாஸ், அஞ்சு அரவிந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மணிவண்ணன், அஜய் ரத்னம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கான இசையை ஆதித்தியன் அமைத்தார். படம் செப்டம்பர் 1998 இல் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[1][2]

ஆசை தம்பி
குறுவட்டு அட்டை
இயக்கம்செந்தில்நாதன்
தயாரிப்புஎஸ். மணி
கதைலியாகத் அலி கான்
இசைஆதித்தியன்
நடிப்புஅருண் பாண்டியன்
அப்பாஸ்
அஞ்சு அரவிந்த்
ஒளிப்பதிவுடி. சேகர்
படத்தொகுப்புஜி. ஜெயசந்திரன்
கலையகம்சேரநாடு மூவி கிரியேசன்ஸ்
வெளியீடு18 செப்டம்பர் 1998
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு ஆதித்யன் இசையமைத்தார். பாடல் வரிகளை பழனி பாரதி மற்றும் காமகோடியன் ஆகியோர் எழுதினர்.[3]

வெளியீடு

1997 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படம் வெளியிடத் தயாராக இருந்தபோதிலும், செப்டம்பர் 1998 இல் வெளியிடப்பட்டது.[4] இந்த படம் வணிக ரீதியாக மோசமாக தோல்வியடைந்தது.[5]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆசை_தம்பி&oldid=30463" இருந்து மீள்விக்கப்பட்டது