ஆகஸ்டு ஃப்ரெட்ரிச் கேமரர்

ஆகஸ்ட் ஃப்ரெட்ரிச் கேமரர் (1767–1837) தென்னிந்தியாவில் ஒரு டேனிஷ் கிறிஸ்தவ மதபோதகராக இருந்தவர்.[1] அவர் திருக்குறளின் முதல் ஜெர்மன் மொழிபெயர்ப்பாளராக அறியப்படுகிறார்.

ஆகஸ்ட் ஃப்ரெட்ரிச் கேமரர்
பிறப்பு1767
இறப்பு1837
தேசியம்டச்சு
பணிகிறிஸ்தவ மதபோதகர்
அறியப்படுவதுதிருக்குறளின் முதல் ஜெர்மானிய மொழிபெயர்ப்பாளர்

வாழ்க்கைக் குறிப்பு

ஆகஸ்ட் ஃப்ரெட்ரிச் கேமரர் டேனிஷ்-ஹாலே மிஷனின் ஒரு பகுதியாக 1791-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி அன்று டிரான்க்பார் என்று அன்று ஐரோப்பியர்களால் அழைக்கப்பட்ட தரங்கம்பாடிக்கு வந்தார். இவரது இப்பயணம் "டிரான்க்பார் மிஷன்" என்று அழைக்கப்படுகிறது.[2] அவர் 1803-இல் திருக்குறளின் முதல் இரண்டு பாகங்களான அறத்துப்பாலையும் பொருட்பாலையும் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.[3] டிரான்க்பார் மிஷனின் கடைசி மதபோதகராக இருந்த இவர் 1837-இல் இறந்தார்.[2]

மேற்கோள்கள்

  1. Ebeling, Sascha (2010). Colonizing the Realm of Words: The Transformation of Tamil Literature in Nineteenth-Century South India (in English). Albany, New York: SUNY Press. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4384-3199-4.
  2. 2.0 2.1 Robert Eric Frykenberg and Alaine M. Low (Eds.) (2003). Christians and Missionaries in India: Cross-cultural Communication Since 1500 (in English). New York: Psychology Press/Routledge. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-1600-9.
  3. Sanjeevi, N. (1973). Bibliography on Tirukkural. In First All India Tirukkural Seminar Papers. Chennai: University of Madras. p. 146.