அ. சங்கரவள்ளிநாயகம்

அ. சங்கரவள்ளிநாயகம் தமிழ்ப்பேராசிரியர்; சொற்பொழிவாளர்; வ.உ.சி.இயல் அறிஞர்; எழுத்தாளர்.

இயற்பெயர்/
அறியும் பெயர்
அ. சங்கரவள்ளிநாயகம்
இறப்பு 2008
பணி தமிழ்ப் பேராசிரியர்
தேசியம் இந்தியர்
கல்வி கலைமுதுவர்
முனைவர்
நூலகவியற் சான்றிதழ்
அறியப்படுவது வ.உ.சி. இயல்
பெற்றோர் அருணாசலம்
மங்கையர்க்கரசி
பிள்ளைகள் ச. திருமலைமுத்துகுமாரசாமி


பிறப்பு

அ. சங்கரவள்ளிநாயகம் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த தமிழாசிரியர் அருணாசலம் – மங்கையர்க்கரசி என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார். நூலகப் பேராசிரியர் திருமலைமுத்துசுவாமி, சுப்பிரமணியன், காமாட்சி மற்றும் ஒருவர் இவருடன் பிறந்தவர்கள் ஆவர். [1]

கல்வி

தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று நூலகவியற் சான்றிதழும் பெற்றார். வ. உ. சிதம்பரனாரின் படைப்புகளை, வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறும் இலக்கியப் பணிகளும் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். [2]

பணிக்கள வாழ்க்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி நகரை அடுத்த நல்லாட்டின்புதூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோ. வே. நா. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். [3]

எழுத்துப்பணி

வ.எண் ஆண்டு நூல் வகை பதிப்பகம் குறிப்பு
01 ? நூலகம் நூலகவியல் ?
02 198? தியாக ஏட்டின் தித்திக்கும் வரலாறு வரலாறு கமலம் பிரிண்டர்ஸ், கோயில்பட்டி
03 வ.உ.சி.வாழ்வும் இலக்கியப் பணிகளும் ஆய்வு தி.தெ.சை.சி.நூற்பதிப்புக் கழகம்,சென்னை முனைவர் பட்ட ஆய்வேடு
04 1994 வ.உ.சி.யும் தமிழும் ஆய்வு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை அறக்கட்டளைச் சொற்பொழிவு
05 1997 திருக்குறள் உரை உரைநூல் ?
06 2002 வள்ளுவப் பேரொளியர் இலக்கியம் அகரம், தஞ்சாவூர்
07 2005 புலத்துரை முற்றிய பொய்யில் புலவர் இலக்கியக் கட்டுரை அகரம், தஞ்சாவூர்
08 2006 பண்டைத் தமிழரின் பண்பாட்டுத் தளங்கள்[4] சமூகவியல் அகரம், தஞ்சாவூர்
09 2007 தமிழ்க் குமுகாயம் குமுகாவியல் அகரம், தஞ்சாவூர்
10 ? நாட்டுப்புறத் தமிழ் நாட்டாரிலக்கியம் ?
11 ? சிற்பி சிந்தனையில் சிறைப்பட்ட சீர்திருத்தகவி இலக்கியக் கட்டுரை ?
12 அடிகள் அகற்றிய அல்லவை ஏழு ? ?

நாட்டுடைமை நூல்கள்

  • இந்நூலாசிரியர் ஆறு நூல்கள் நாட்டுடைமை நூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.[5] அவை வருமாறு;-
  1. தமிழ் ஆவது..
  2. தமிழ்க் குமுகாயம்
  3. வ. உ. சியும் இலக்கிய பணிகளும் [6]
  4. வ. உ. சியும் தமிழும்
  5. வள்ளுவப் பேரொளியார்

தமிழமைப்பு

சங்கரவள்ளிநாயகம் தான் வாழ்ந்த கோயில்பட்டியில் திருவள்ளுவர் மன்றம் என்னும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.[7]

பாராட்டுகளும் விருதுகளும்

சிராப்பள்ளி மருத்துவ மன்ற அரங்கில் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் மகன் மருத்துவர் இரா. கலைக்கோவன் தலைமையிலான அமைப்பு சங்கரவள்ளிநாயகத்திற்கு 2007 ஆம் ஆண்டில் தமிழறிஞர் விருது வழங்கியது.[7]

மறைவு

சங்கரவள்ளிநாயகம் கோயில்பட்டியில் 2008 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.[7]

நாட்டுடைமை

அ. சங்கரவள்ளிநாயகத்தின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவதாக 2021 ஆகத்து 31ஆம் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. [8]

சான்றடைவு

  1. திருமலை முத்துசுவாமி; முதலுதவி; திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்; முதற்பதிப்பு 1955; பக்.1
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2021-09-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210901131044/http://tamilaivugal.org/TamilPhd/TamilPalkalaikazhagaAayvugal?universityResearchId=3351. 
  3. பொக்கிஷம், நாறும்பூநாதன்
  4. பண்டைத் தமிழரின் பண்பாட்டுத் தளங்கள். அன்னம் - அகரம் வெளியீட்டகம். https://www.panuval.com/pandai-tamizharin-panpaattu-thalangal-10020881. 
  5. இந்த யூடிப்பு பதிவு வழியே ஆறு நூல்களையும் அறியலாம்
  6. வ. உ. சியும் இலக்கிய பணிகளும். பரிசல் வெளியீடு. https://www.panuval.com/vavusi-vazhkkai-varalarum-10019886. 
  7. 7.0 7.1 7.2 திரும்பிப்பார்க்கிறோம் – 30, கலைக்கோவன் இரா.
  8. https://mdnews.live/tamil/when-writing-a-name-in-tamil-you-should-follow-the-practice-of-writing-the-letter-in-tamil-beforehand-minister-thangam-tennarasu
"https://tamilar.wiki/index.php?title=அ._சங்கரவள்ளிநாயகம்&oldid=25936" இருந்து மீள்விக்கப்பட்டது