அர்த்தநாரி (2016 திரைப்படம்)

அர்த்தநாரி (Arthanari) என்பது 2016ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இப்படத்தில் அருந்ததி அறிமுக நடிகர் ராம்குமார் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மலையாளத்தில் அர்த்தநாரி என்று மொழிமாற்றம் செய்யபட்டு வெளியிடப்பட்டது.[1]

அர்த்தநாரி
இயக்கம்சுந்தர இளங்கோவன்
தயாரிப்புஏ. எஸ். முத்தமிழ்
திரைக்கதைசுந்தர இளங்கோவன்
இசைவி. செல்வகணேஷ்
நடிப்புஅருந்ததி
ராம்குமார்
ஒளிப்பதிவுசிறீ ரஞ்சன்ராவ்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்கிருத்திகா பிலிம்ஸ் கிரியேசன்
வெளியீடு8 சூலை 2016 (2016-07-08)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

செல்வமணிக்கம் சென்னையில் ஒரு ஆசிரமத்தை நடத்திவருகிறார், கார்த்திக் அங்கே வளர்கிறான். காவல் அதிகாரியான சத்தியப்பிரியா கார்த்திக்குடன் மோதலில் ஈடுபடுகிறாள். பின்னர் அவனது கடந்த காலத்தைப் பற்றி அறிந்து அவனுக்கு ஆறுதல் கூறுகிறாள். பின்னர் அவர்கள் காதலிக்கிறார்கள். ஒரு நாள், செல்வமணிக்கம் இறந்து விடுகிறார். அவர் இயற்கையான மரணம் அடைந்ததாக கார்த்திக் கருதுகிறான். ஆனால் அவர் கொலை செய்யப்பட்டதாக சத்தியப்பிரியா சொல்லுகிறாள். கார்த்திக்கும், சத்தியப்பிரியாவும் இணைந்து செல்வமணிக்கத்தின் மரணத்திற்குப் பழிவாங்க விரும்புகிறார்கள்.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தை பாலாவின் முன்னாள் உதவியாளர் சுந்தர இளங்கோவன் இயக்கியுள்ளார்..மோதல் கொலையில் நிபுணத்துவம் பெற்ற காவல் அதிகாரி சத்தியபிரியாவாக அருந்ததியும், சத்தியப்ரியா வழக்கில் சிக்கிய கட்டுமானப் பொறியாளராக அறிமுக நடிகர் ராம்குமார் நடிக்கிறார். தனது பாத்திரத்திற்கு தயாராவதற்காக, அருந்ததி ப்ளூ ஸ்டீல், தி போன் கலெக்டர், மர்தானி உள்ளிட்ட அதே வகையிலான படங்களை பார்த்தார்.[2] ஆண், பெண் கதாபாத்திரங்களுக்கு சம அளவு முக்கியத்துவம் இருப்பதால் படத்திற்கு அர்த்தநரி என்று பெயரிடப்பட்டது. படத்தில் நாசர் துணை வேடத்திலும், ராஜேந்திரன் எதிர்மறைப் பாத்திரத்திலும் நடித்துள்ளானர்.[3]

இசை

படத்தின் பாடல்களுக்கு வி. செல்வகணேஷ் இசையமைத்தார்.[4]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "என் உசிரே"  பிரசன்னா 4:25
2. "கை வீசி நடக்கும்"  கார்த்திக், எம். எம். மானசி 3:58
3. "தீண்ட தீண்ட"  எம். எம். மோனிசா 4:55
4. "மந்திர விழியால்"  எம். எம். மோனிசா 3:58
5. "ஏன் என்னை நீ"  எம். எம். மோனிசா 4:46
மொத்த நீளம்:
22:20

வெளியீடு

டைம்ஸ் ஆப் இந்தியா இப்படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றரையைக் கொடுத்து, "குறைந்த செலவில் எடுக்கபட்ட படங்கள் மோசமான உணர்வைத் தரும் படங்களாக உள்ளன. ஆனால் இது அவ்வாறு மோசமான உணர்வைத் தரவில்லை" என்று எழுதியது.[5] டைம்ஸ் ஆப் இந்தியா சமயம் இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் இரண்டை வழங்கியது மேலும் இயக்குனரையும், அருந்ததியின் நடிப்பையும் பாராட்டியது.[6]

குறிப்புகள்