அருந்ததி ராய்
சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.
அருந்ததி ராய் | |
---|---|
2007 இல் World Tribunal on Iraq இல் நிகழ்த்திய உரை | |
பிறப்பு | சுசானா அருந்ததி ராய் 1961 நவம்பர் 24 இந்தியா |
தொழில் | நாவலாசிரியை, அரசியல் கட்டுரையாளர்,அணுஆயுத எதிர்ப்பாளர் |
தேசியம் | இந்தியர் |
காலம் | 1996-இன்றுவரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் |
வாழ்க்கைக் குறிப்பு
அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும்[1] வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட மேலாளர் ரஜித் ராய்க்கும் பிறந்தார்.[2]
தனது சிறுவயதில் கேரளாவில் உள்ள ஆய்மணம் (Aymanam) என்ற சிற்றூரில் வளர்ந்தார். கோட்டயத்திலும் நீலகிரியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் தில்லிப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை படிப்பில் சேர்ந்தார். அங்கு தனது முதல் கணவரைச் சந்தித்தார். பின் தங்கள் படிப்பை விடுத்து இருவரும் வெளியேறினர். தன் முதல் கணவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் அவர் பிரதீப் கிரிஷன் என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து சில படங்களை எடுத்தனர். இப்படங்களுக்கு அருந்ததி திரைக்கதை எழுதியது குறிப்படத்தக்கது[3].
சமூகக் குரல்
இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் (en:Narmada Bachao Andolan) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார்.
நர்மதை போராட்டம்
Maybe. Inch by inch. Bomb by bomb. Dam by dam. Maybe by fighting specific wars in specific ways. We could begin in the Narmada Valley.[4]
காஷ்மீர் பிரச்சனை
India needs azadi from Kashmir just as much—if not more—than Kashmir needs azadi from India.[5]
படைப்புகள்
அருந்ததி ராய் நாவல்கள் , அரசியல் கட்டுரைகள் , விமர்சனங்களைப் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார். இவரது படைப்புகள் உலகில் பல பத்திரிக்கைகளில் இடம் பெற்றுவருகின்றன.
விமர்சனம்
- பேண்டிட் குவீண் [6]en:Bandit Queen
புதினங்கள்
- த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் (en:The God of Small Things)
விருதுகள்
- 1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர்[7] என்பது குறிப்பிடத்தக்கது.
- 2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்[8].
- மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.[9]
- 2015 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்றிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்படுகிறது.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ மேரி ரோசைப் பற்றிய கட்டுரை (ஆங்கில மொழியில்)
- ↑ அருந்ததி ராய் - குரல் அற்றவர்களின் குரல்!
- ↑ அருந்ததியின் திரை படைப்புகள் (ஆங்கில மொழியில்)
- ↑ நர்மதை போராட்டக் கட்டுரை (ஆங்கில மொழியில்)
- ↑ காஷ்மீர் கட்டுரை பரணிடப்பட்டது 2008-09-04 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- ↑ பேண்டிட் குவீண் விமர்சனம் (ஆங்கில மொழியில்)
- ↑ அருந்ததி ராயின் ஒளிப்படம் மற்றும் படைப்புகளின் விவரங்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ Sahitya Akademi Award: Arundhati Roy Rejects Honor பரணிடப்பட்டது 2013-08-21 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- ↑ சிட்னி அமைதிப் பரிசு பரணிடப்பட்டது 2010-01-10 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)