அயன் (திரைப்படம்)
அயன் (Ayan) (Audio file "Ta-அயன்.ogg" not found) என்பது 2009 ஆம் ஆண்டு கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அதிரடி த்ரில்லர் தமிழ் திரைப்படம். இதில் கதையின் நாயகனாக சூர்யா நடிக்க பிரபு, தமன்னா மற்றும் அகஷ்தீப் சைக்ஹல் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இத் திரைப்படத்தினை ஏவிஎம் சார்பாக எம். சரவணன், எம். எஸ். குகன் தயாரிக்க சன் பிக்சர்ஸ் வெளியீடு செய்தது.
அயன் | |
---|---|
இயக்கம் | கே. வி. ஆனந்த் |
தயாரிப்பு | எம். சரவணன் எம். எஸ். குகன் கலாநிதி மாறன் |
கதை | கே. வி. ஆனந்த் சுபா |
இசை | ஹாரிஸ் ஜெயராஜ் |
நடிப்பு | சூர்யா தமன்னா பிரபு அக்ஷதீப் |
ஒளிப்பதிவு | எம். எஸ். பிரபு |
படத்தொகுப்பு | படத்தொகுப்பாளர் ஆன்டனி |
கலையகம் | ஏவிஎம் புரொடக்சன் |
விநியோகம் | சன் பிக்சர்ஸ்(இந்தியா) ஐங்காரன் இன்டெர்நெசனல்(ஐக்கிய இராச்சியம்) ஃபைஸ்டார்(மலேசியா)[1] |
வெளியீடு | ஏப்ரல் 3, 2009 |
ஓட்டம் | 158 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹200 மில்லியன் (அமெரிக்க $ 3.2 மில்லியன்)[2] |
மொத்த வருவாய் | ₹650 மில்லியன் (அமெரிக்க $ 11 மில்லியன்)[2] |
நடிகர்கள்
- சூர்யா - தேவா
- தமன்னா - யமுனா
- பிரபு - தாஸ்
- அகஷ்தீப் சைக்ஹல் - கமலேஷ்
- ஜெகன் - சிட்டி பாபு
- கருணாஸ் - டில்லி
- பொன்வண்ணன் - பார்த்திபன்
- ரேணுகா - தேவாவின் தாய்
- ரகுவரன் - தேவாவின் தந்தை
- கொயனா மித்ரா - சிறப்பு நடனம் "ஹனி ஹனி" பாடல்
- தில்லி கணேஷ்
- ஜானகி சபேஷ்
- கலைராணி
கதைச் சுருக்கம்
இந்தத் திரைப்படம் தேவா என்ற வாலிபனை சுற்றி நடக்கிறது. தேவாவின் அம்மா அவனை அரசாங்க அதிகாரி ஆக்க விரும்புகிறார். ஆனால் தேவா சிறுவயது முதல் ஆறுமுக தாஸ் என்ற கடத்தல்காரருடன் வேலை செய்கிறார். இந்த நேரத்தில் ஆறுமுக தாஸுக்கு போட்டியாக கமலேஷ் உருவெடுக்கிறார். போட்டியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது மீதி கதை.
பாடல்கள்
இத் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க பாடல் வரிகளை வைரமுத்து, நா. முத்துக்குமார் மற்றும் பா. விஜய் எழுதியிருந்தார்கள். இத் திரைப்படத்தில் இடம் பெற்ற "விழி மூடி யோசித்தால்" பாடல் மிகவும் பிரபலம் பெற்றது.[3] இத் திரைப்படத்திற்கு இசை அமைத்ததின் மூலம் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருது, ஆண்டின் சிறந்த இசைத் தொகுப்புக்காக மிர்ச்சி விருது மற்றும் சிறந்த இசையமைப்பாளர் எடிசன் விருதுகளை பெற்றார்.
அயன் | ||||
---|---|---|---|---|
ஒலிச்சுவடு
| ||||
வெளியீடு | 19 சனவரி 2009 | |||
இசைப் பாணி | திரைப்படப்பாடல்கள் | |||
நீளம் | 27:36 | |||
இசைத்தட்டு நிறுவனம் | ஏவிஎம் மியூசிக் | |||
இசைத் தயாரிப்பாளர் | ஹாரிஸ் ஜயராஜ் | |||
ஹாரிஸ் ஜயராஜ் காலவரிசை | ||||
|
# | பாடல் | வரிகள் | பாடியவர்கள் | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "பள பளக்கற பகலா நீ" | நா. முத்துக்குமார் | ஹரிஹரன் | 5:25 | |
2. | "விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்" | நா. முத்துக்குமார் | கார்த்திக் (பாடகர்) | 5:32 | |
3. | "ஓ ஓ ஓயாயியே ஏயாயியே" | பா. விஜய் | பென்னி தயால், ஹரிச்சரண், சின்மயி | 5:33 | |
4. | "நெஞ்சே நெஞ்சே நீ எங்கே" | வைரமுத்து | ஹரிஷ் ராகவேந்திரா, மஹதி | 5:44 | |
5. | "ஏ ஹனி ஹனி கண்ணில் ஹனி" | பா. விஜய் | சயனோரா ஃபிலிப், தேவன் ஏகாம்பரம் | 5:19 | |
6. | "ஓ சுப்பர் நோவா" | நா. முத்துக்குமார் | பாடகர் கிரிஸ் | 2:37 | |
மொத்த நீளம்: |
27:36 |
ஆதாரங்கள்
- ↑ "அயன்". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on 2012-03-24. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 31, 2011.
{{cite web}}
: Unknown parameter|parent=
ignored (help) - ↑ 2.0 2.1 "Suriya: Bollywood's hottest six-pack". மின்ட். பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2011.
- ↑ சிறீதர் பிள்ளை (17 திசம்பர் 2009). "ஹாரிஸ் ஜயராஜ், த மேன் ஆப் த மொமன்ட் – இசை – எண்டர்டெயின்மென்ட் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2012-11-06. பார்க்கப்பட்ட நாள் 26 ஜூலை 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|=
ignored (help)