அம்பிகா சுகுமாரன்

அம்பிகா சுகுமாரன் நாயர் (Ambika Sukumaran Nair) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். 1950கள் மற்றும் 1960களில் மலையாள திரைப்படங்களில் பணியாற்றியதற்காக நன்கு அறியப்படுகிறார். இவர் திருவிதாங்கூர் சகோதரிகளான லலிதா, பத்மினி ராகினி, மேலும் ஷோபனா, வினீத், கிருஷ்ணா சுகுமாரி ஆகியோரின் நெருங்கிய உறவினர்.[1] அம்பிகாவும் அந்தப் பாதையில் செல்லத் தொடங்கினார். 1952 இல் உதயா ஸ்டுடியோவின் விஸ்ப்பிண்டே விலி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் பிரேம்நசீரின் முதல் நாயகியும் ஆவார்.[2] 1968 ஆம் ஆண்டில், மலையாள திரைப்படத்தில் பி. வேணு இயக்கிய விருதன் சங்கு என்ற முழுநீள நகைச்சுவை படத்தில் முன்னணி நடிகையாக நடித்தார். இவர் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[3]

அம்பிகா சுகுமாரன்
பிறப்புதிருவனந்தபுரம், கேரளம், இந்தியா
பணிபரத நாட்டியக் கலைஞர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1952 – 1979
வாழ்க்கைத்
துணை
கே. வி. சுகுமாரன்
பிள்ளைகள்2
உறவினர்கள்திருவிதாங்கூர் குடும்பம்,
ரவி வர்மா (கொள்ளுப்பாட்டனார்)

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் சுகுமாரனைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் குடியேறினார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[4] இவர் ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர். இவள் நியூ செர்சியில் ஒரு நடனப் பள்ளியை நடத்திவந்தார்.[3]

பகுதி திரைப்படவியல்

தமிழ்

  1. பொன்னி (1953) நடனக் கலைஞராக
  2. ரம்பையின் காதல் (1956) மேனகையாக
  3. ராஜா ராணி (1956) நடனக் கலைஞராக
  4. மாதர் குல மாணிக்கம் (1956) நடனக் கலைஞராக
  5. புதுவாழ்வு (1957)
  6. யானை வளர்த்த வானம்பாடி (1959)
  7. இரத்தினபுரி இளவரசி (1960)
  8. இவன் அவனேதான் (1960)
  9. சிறீ வள்ளி (1961)
  10. நான் வணங்கும் தெய்வம் (1963)
  11. கந்தன் கருணை (1967) பதுமகோமலையாக
  12. தில்லானா மோகனாம்பாள் (1968) மரகதமாக

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அம்பிகா_சுகுமாரன்&oldid=22312" இருந்து மீள்விக்கப்பட்டது