அமுதசாகரம்
அமுதசாகரர் என்பவரால் இயற்றப்பட்ட நூல் அமுதசாகரம். உயிரைத் தளிர்க்கச் செய்வது அமிழ்தம். [1] அம்மும் உணவு அமுதம். உணவு உடலைத் தளிர்க்கச் செய்யும். சாகரம் என்பது கடல். சமணர் தம் தெய்வம் அருகனை அமுதசாகரர் என்பர். அருகன் பெயர் பூண்ட இப்புலவரால் செய்யப்பட்ட நூல் அமுதசாகரம்.
அமுதசாகரனார் யாப்பருங்கலம் என்னும் நூலை எழுதினார். இது ஆசிரியப்பாவால் ஆன நூற்பாக்களைக் கொண்டது. பின்னர் இவரே யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலைச் செய்தார். இது கட்டளைக்கலித்துறை என்னும் யாப்பால் அமைந்த நூற்பாக்களைக் கொண்டது. யாப்பருங்கல நூலுக்குப் பழைய விருத்தி உரை ஒன்று உள்ளது.[2] அதிலிருந்து 76 நூற்பாக்களைத் தொகுத்து முனைவர் க.ப.அறவாணன் அமுதசாகரம் என்னும் பெயரில் ஒரு நூலை உருவாக்கியுள்ளார்.[3]
இதனைத் தனிநூலாகத் தொகுத்ததற்கான விளக்கம் புலப்படவில்லை.