அமிதவ் கோசு

அமிதவ் கோஷ் Amitav Ghosh (பிறப்பு 11 ஜூலை 1956) [1] ஓர் இந்திய எழுத்தாளர். ஐம்பத்தைந்தாவதாக 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதை வென்றார். கோஷின் இலட்சிய நாவல்களில் குறிப்பாக இந்தியா மற்றும் தெற்காசியா மக்களின் தேசிய மற்றும் தனிப்பட்ட அடையாளத்தின் தன்மையை ஆராய சிக்கலான கதை உத்திகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர் வரலாற்று புனைகதைகளை எழுதியுள்ளார்.காலனித்துவம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற தலைப்புகளைப் பற்றி விவாதிக்கும் புனைக்கதை அல்லாத படைப்புகளையும் எழுதியுள்ளார்.

கோஷ் டெஹ்ராடூனில் உள்ள தி டூன் பள்ளியில் பயின்றார், மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் புது தில்லியில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் மற்றும் பல கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார். அவரது முதல் நாவலான தி சர்க்கிள் ஆஃப் ரீசன் 1986 இல் வெளியிடப்பட்டது, இதனைத் தொடர்ந்து தி ஷேடோ லைன்ஸ் மற்றும் தி க்ளாஸ் பேலஸ் உள்ளிட்ட கற்பனையான நாவல்களையும் எழுதினார். 2004 மற்றும் 2015 க்கு இடையில், அவர் இபிஸ் டிரைலாசி பற்றி எழுதினார், இது முதல் ஓபியம் போரின் உருவாக்கம் மற்றும் தாக்கங்களைப் பற்றிப் பேசுகின்றது. அவரது புனைகதை அல்லாத படைப்புகளில் இன் ஆண்டிக் லாண்ட் மற்றும் தி கிரேட் டிரேஞ்ச்மென்ட்: கிலைமேட் சேஞ்ச் அன்டு தி அன்திங்கபில் போன்றவை அடங்கும்.

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=அமிதவ்_கோசு&oldid=18712" இருந்து மீள்விக்கப்பட்டது