அனுஜா ஐயர்

அனுஜா ஐயர் என்பவர் ஒரு இந்திய நடிகையாவார்.[1] இவர் தமிழ் திரைப்படத்துறையில் 2007ல் வெளிவந்த சிவி என்ற திகில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். பிறகு 2009ல் நினைத்தாலே இனிக்கும், உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

அனுஜா ஐயர்
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007- தற்போது

பிறப்பும் படிப்பும்

அனுஜா ஐயரின் இயற்பெயர் சந்தியா என்பதாகும். இவர் தமிழ்நாடு சென்னையில் பிறந்தவர்.[2] சென்னை சாந்தோம், ரோசரி மெட்ரிக் பள்ளியில் பள்ளிப் படிப்பினை முடித்தார். டெல்லி சிறீராம் கல்லூரியில் இளங்கலை வணிகவியலைப் படித்தார்.

திரைப்படப் பட்டியல்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2007 சிவி நந்தினி தமிழ்
2008 முதல் முதல் முதல் வரை சிந்து தமிழ்
2009 நினைத்தாலே இனிக்கும் ஷாலினி தமிழ்
உன்னைப்போல் ஒருவன் நடாசா ராஜ்குமார் தமிழ் பரிந்துரை பிலிம்பேர் துணை நடிகை - தமிழ்
ஈநாடு சில்பா கிருஷ்ணா தெலுங்கு
2011 கோ சோனாலி தமிழ் கௌரவ வேடம்
யுவன் யுவதி தங்கமீனா தமிழ் கௌரவ வேடம்
2012 விண்மீன்கள் இலா தமிழ்
காதல் 2 கல்யாணம் தமிழ் தயாரிப்பு பணியில்
தொலைக்காட்சி
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2012 தர்மயுத்தம் காயத்ரி தமிழ்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அனுஜா_ஐயர்&oldid=21447" இருந்து மீள்விக்கப்பட்டது