அந்தப்புரம் (திரைப்படம்)

அந்தப்புரம் (Antahpuram) 1998இல் தெலுங்கு மொழியில் வெளிவந்த அதிரடித் திரைப்படம். ஆனந்தி ஆர்ட் கிரியேசன்ஸ் சார்பில் பி. கிரண் தயாரிக்க கிருஷ்ண வம்சி இதை இயக்கியுள்ளார். இதில் ஜெகபதி பாபு, சௌந்தர்யா, பிரகாஷ் ராஜ் மற்றும் சசிகுமார் (கன்னட நடிகர்) ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.[1] பிரகாஷ் ராஜ் இப்படத்தில் தனது நடிப்பிற்காக தேசிய திரைப்பட சிறப்பு விருதை பெற்றார். மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகைக்கான மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் இந்தத் திரைப்படம் பெற்றது.[2] சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருது ஜகபதி பாபுவிற்கும், சிறந்த பின்னணி பாடகிக்கான நந்தி விருது எஸ். ஜானகிக்கும் மற்றும் சிறந்த நடிகைக்கான சிறந்த நடிகைக்கான நந்தி விருது சரிதாவிற்கும் கிடைத்தது. இது இராயலசீமை பகுதியின் அரசியலை அடிப்படையாகக் கொண்டு முதலில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். பின்னர் 1999 இல் ஜெகபதி பாபுவிற்கு பதிலாக பார்த்திபன் நடிக்க தமிழில் இதே பெயரில் வெளிவந்தது. பின்னர் இந்தியில் ("சக்தி" தி பவர்) (2003) என்ற பெயரில் வெளிவந்தது.

அந்தப்புரம்
இயக்கம்கிருஷ்ண வம்சி
தயாரிப்புகிரண்
இசைஇளையராஜா
நடிப்புபிரகாஷ் ராஜ்
சௌந்தர்யா
பார்த்திபன்
ஒளிப்பதிவுஎஸ். கே. பூபதி
வெளியீடுசூலை 16, 1999 (1999-07-16)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

பானு (சௌந்தர்யா) மொரிஷியஸில் அவரது பாதுகாவலருடன் (பாபு மோகன்) மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு கவலையற்ற இளம் பெண். பானுவும், பிரகாஷும் (சாய்குமார்) திருமணம் செய்துகொள்கிறார்கள், ஒரு நாள், பிரகாஷ் தனது குடும்பத்தினர் இந்தியாவில் சிக்கலில் இருப்பதை அறிகிறார். அவர் ஒரு அனாதை என்று நம்பியதால் பானு குழப்பமடைகிறார், ஆனால் பிரகாஷ் அவரது குடும்பத்தினர் மிகுந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்கு சொந்தமானவர், அவர்களுடைய சமூகத்தின் வன்முறைகளை தாங்க இயலாமல், அவர் மொரிஷியஸ் நகருக்கு குடிபெயர்ந்தார் என்று பானுவிடம் விளக்குகிறார். அவர்கள் நிலைமையை தெரிந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு பயணம் செய்ய முடிவு செய்தனர். பிரகாஷின் சொந்த ஊரில் அவரது தந்தையான நரசிம்மா (பிரகாஷ் ராஜ்) பழமையான பழக்கவழக்கங்களைக் கொண்ட செல்வாக்கு மிக்கவராக உள்ளார். பானுவிற்கு அங்கு நடக்கும் வன்முறைகளில் விருப்பமில்லை. நரசிம்மனின் மனைவி சாரதா பிரகாஷ், பானு மற்றும் அவர்களின் மகனை நன்கு கவனித்துக்கொள்கிறார். பிரகாஷின் பிறந்த நாள் வரை இந்தியாவில் இருக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறார். இதற்கிடையில் நரசிம்மாவின் எதிரிகளால் பிரகாஷ் கொல்லப்படுகிறார். பானு கலக்கமடைந்து அந்த ஊரை விட்டு வெளியேற முயற்சிக்கிறாள், ஆனால் நரசிம்மா பானுவின் முயற்சியை தடுக்கிறார். ஆனால் இறுதியில் அவரது பேரனுடன் நடைபெறும் உணர்ச்சி ரீதியாக போரடத்திற்குப் பின்னர் பானுவையும் குழந்தையையும் வெளியேற அனுமதிக்கிறார்.

தயாரிப்பு

தெலுங்குத் திரைப்படத்தின் வெற்றிகரமான வரவேற்பைப் பெற்றதன் மூலம், இயக்குனர் கிருஷ்ணா வம்சி 1999 ஆம் ஆண்டில் "அந்தப்புரம்" என்ற பெயரில் தமிழ் பதிப்பை வெளியிட்டார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், சவுந்தர்யா மற்றும் பார்த்திபன் ஆகியோருக்கு முக்கிய காட்சிகளை வைத்திருந்தார்.[3]

நடிகர்கள்

ஒலித்தொகுப்பு

இந்தப் படதிற்கு இசை இளையராஜா , பாடல்கள் ஸ்ரீவெண்ணில சீத்தாராம சாஸ்த்திரி

# பாடல்பாடியோர் நீளம்
1. "அழகே உன் முகம்"  சித்ரா 5:54
2. "மானா மதுர"  மனோ, சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) 4:48
3. "அம்மம்மா காதல்"  சித்ரா 5:10
4. "தை தக தை"  சங்கர் மகாதேவன், கோபிகா பூர்ணிமா 5:40
5. "பூவேதாம் கண்ணா"  சித்ரா 4:59
மொத்த நீளம்:
27:31

மேற்கோள்கள்

வெளி இணைப்பு