அதிதி (திரைப்படம்)

அதிதி (Athithi) 2014இல் பரதன் இயக்கத்தில் வெளிவந்த அதிரடித் தமிழ் திரைப்படம் ஆகும். இதில் நிகேஷ் ராம், நந்தா, மற்றும் அனன்யா ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் தம்பி ராமையா, வி. வி. பிரசன்னா, வர்ஷா மற்றும் சென்றாயன் போன்றோரும் நடித்திருந்தனர். இப்படம் 2010இல் அனூப் மேனன் இணைந்து எழுதி மலையாளத்தில் வெளிவந்த "காக்டெயில்" என்ற படத்தின் மறு ஆக்கமாகும். இதுவும் "பட்டர்பிளை ஆன் எ வீல்" என்றத் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.[1][2] இத்திரைப்படம் 2014 ஜூன் 27 அன்று வெளிவந்தது. இன்றைய உலகின் அவசியங்களின் பட்டியலில் திருப்திகரமான ஒரு வேலையில் தொடங்கி, மேலும் கை நிறைய பணம் சேர்த்து வைப்பதில் முடிவடைகிறது. ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் ஒரு மகிழ்ச்சியான குடும்பம் , அது முடிந்தவுடன், சாதராண ஒரு நாளானது எவ்வாறு கிடைக்கும்? அனைத்தையும் இழந்து விட்ட பிறகு? அத்தி அவ்வாறாக வெற்றிகரமான மற்றும் உறுதியான இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சொல்லும் படமாகும். "கில்லி" , "தில்" மற்றும் "தூள் போன்ற வெற்றிகரமான படங்களின் கதைகளை அளித்த பரதனின் இரன்டாவது முயற்சியாகும், "அத்தி" ஒரு எளிய மனிதன் வாழ்க்கையில் ஏற்படும் அதிரடித் திருப்பத்தைத் சொல்கிறது.

அதிதி
இயக்கம்பரதன்
தயாரிப்புகே. பி. ராமக்ருஷ்ணன் நாயர்
கதைBharathan
இசைபரத்வாஜ்
ரத்தீஷ் வேகா
நடிப்புநிகேஷ் ராம்
நந்தா
அனன்யா
ஒளிப்பதிவுஎஸ். ஜெய்
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
கலையகம்ஸ்பெல்பவுன்ட் பிலிம்ஸ்
வெளியீடு27 சூன் 2014 (2014-06-27)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு25 கோடிகள்
மொத்த வருவாய்40 கோடிகள்

கதை

மதியழகன் (நந்தா) ஒரு முன்னணி சொத்து விளம்பர நிறுவனத்தில் மிகவும் வெற்றிகரமான மேலாளராக பணியாற்றுகிறார். வாசுகியை (அனன்யா) திருமணம் செய்து கொண்டு பவி என்ற ஐந்து வயது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான். ஆடம்பரமான ஒரு வீடு, நல்ல ஊதியம், ஆதரவான முதலாளி மற்றும் மகிழ்ச்சியான குடும்பம் மகிழ்ச்சியான வாழ்க்கை இந்த சகாப்தத்தில் பெரும்பாலான மக்களுக்கு மிக அதிகமான கனவு இதுதான். ஆனால் ஒரு நாள் மாறும் போது?. மதியழகன் மற்றும் வாசுகி இருவரும் ஒரு வார இறுதியை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர். அப்போது மர்மமான அந்நியன் அவர்களது குழந்தை பவியை துப்பாக்கி முனையில் பிணைக் கைதியாக வைத்து தனது விருப்பத்திற்கு அடிபணிய அவர்களை அச்சுறுத்த தொடங்குகிறான் அவர்களிடமுள்ள பணத்தை அடைய நினைக்கிறான். மதியழகன் தன்னிடம் உள்ள அனைத்தையும் அவனிடம் இழக்கிறான். அடுத்து, அவன் தனது நிறுவனத்தின் உயர்மட்ட இரகசியங்களை போட்டியாளருக்கு தெரிவிப்பதன் மூலம் தனது வாழ்க்கையையும் இழக்கிறான். தம்பதிகள் தங்கள் சிறிய மகளின் வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் இழக்க முனைகிறார்கள். அதே காரணத்திற்காக, அவர்கள் காவல் துறையில் புகார் செய்யாமல் இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் இலக்கிலிருந்து மிகவும் விலகி போகின்றனர். இந்தப் பிரச்சனையிலிருந்து அவர்கள் எவ்வாறு வெளியில் வருகிறார்கள் என்பதை எதிர்பாராத பல அதிரடித் திருப்பங்களுடன் கதை கொண்டு செல்கிறது.

நடிகர்கள்

  • நிகேஷ் ராம் - சரவணன்
  • நந்தா - மதியழகன்
  • அனன்யா - வாசுகி
  • வர்சா அசுவதி -லட்சுமி
  • யுவினா பார்த்தவி - பவி
  • தம்பி ராமையா - ஒண்டிப்புலி
  • சென்றாயன் - பூனை குமார்
  • சௌந்தரராஜா - சிவா
  • காஜல் பசுபதி - மரிகொழுந்து
  • அஞ்சலி தேவி - மருத்துவர் நிர்மலா
  • சம்பத் ராம் - சுடலை
  • ஜெயமணி - பஞ்சாமிர்தம்
  • வி. வி. பிரசனா
  • ரச்சனா மயூரா

தயாரிப்பு

ஸ்பெல்பவுன்ட் பிலிம்ஸ் 2013 செப்டம்பரில் இதை தயாரிப்பதாக அறிவித்தது, இப்படத்தில் அனன்யா நாயகியாகவும் பரதன் இயக்குனராகவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சிறிய வேடங்களில் நடித்து வரும் நடிகர் சீனு முதலில் நடிப்பதாக இருந்தது,[3] இருப்பினும், தயாரிப்பு தொடங்குவதற்கு முன், நந்தா சீனுவிற்கு பதிலாக நடித்திருந்தார்.[4] The film began shoot in November 2013.[5] அழகிய தமிழ்மகன் (2007) படத்திற்குப் பின்னர் பரதன் இயக்கிய இரண்டாவது படமாகும்.

விமர்சனம்

தி இந்து நாளிதழ் ஒரு எதிர்மறையான விமர்சனத்தை வைத்தது.[6] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஐந்துக்கு மூன்று மதிப்பெண் வழங்கியது .[7][8] தி டெக்கன் குரோனிக்கள் படம் சராசரிக்கு மேல் என்று எழுதுகிறது .[9]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அதிதி_(திரைப்படம்)&oldid=29998" இருந்து மீள்விக்கப்பட்டது