அடூர் கோபாலகிருஷ்ணன்


அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan, பிறப்பு: 1942 ஆம் ஆண்டு சூலை மாதம் 3ம் தேதி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார்.[1] இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.

அடூர் கோபாலகிருஷ்ணன்
அடூர் கோபாலகிருஷ்ணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
அடூர் கோபாலகிருஷ்ணன்
பிறந்ததிகதி 3 சூலை 1941
பணி இயக்குநர்,
திரைக்கதை ஆசிரியர்,
திரைப்படத் தயாரிப்பாளர்
குறிப்பிடத்தக்க விருதுகள் Knight of the
Legion of Honour,
Commandeur des Arts
et des Lettres‎
இணையதளம் [Adoorgopalakrishnan]

இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த விருதுகளான பத்மஸ்ரீ விருது 1983ஆம் ஆண்டிலும் பத்ம விபூசன் விருது 2006 இலும் இவருக்கு வழங்கப்பட்டன.

படைப்புகள்

திரைப்படங்கள்

  • நிழல்குத்து (2002)
  • கதாபுருஷன் (1996)
  • விதேயன் (1994)
  • மதிலுகள் (1990)
  • அனந்தரம் (1987)
  • முகாமுகம் (1984)
  • எலிப்பத்தாயம் (1981)
  • கொடியெட்டம் (1977)
  • சுயம்வரம் (1972)

ஆவணப் படங்கள் / குறும்படங்கள்

  • கலாமண்டலம் ராமன்குட்டி நாயர் (2005)
  • கலாமண்டலம் கோபி (1999)
  • சோழப் பாரம்பரியம் (1980)
  • யக்ஷகானம் (1979)
  • Past in Perspective (1975)
  • குரு செங்கனூர் (1974)
  • Towards National STD (1969)
  • And Man Created (1968)
  • Danger at Your Doorstep (1968)
  • The Myth (1967)
  • A Great Day (1965)

புத்தகங்கள்

  • சினிமாவின் உலகம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : மீரா கதிரவன். மலையாளத்தில், சினிமாயுடே லோகம் என்று வெளிவந்து 1983ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற புத்தகம்)
  • நிர்மால்யம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : மீரா கதிரவன்)
  • எலிபத்தாயம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : சுந்தர ராமசாமி)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அடூர்_கோபாலகிருஷ்ணன்&oldid=20756" இருந்து மீள்விக்கப்பட்டது