அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில்
அச்சரப்பாக்கம் ஆட்சீசுவரர் கோயில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[2]
சந்நிதி 1[1] | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | அச்சிறுபாக்கம் |
பெயர்: | சந்நிதி 1[1] |
அமைவிடம் | |
ஊர்: | அச்சரப்பாக்கம் |
மாவட்டம்: | செங்கல்பட்டு |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | உமையாட்சீசர் |
தாயார்: | சுந்தரநாயகி, பாலாம்பிகை, இளங்கிளியம்மை |
தல விருட்சம்: | சரக்கொன்றை |
வரலாறு | |
தொன்மை: | புராதனக்கோயில் |
சந்நிதி 2 [1] | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | அச்சிறுபாக்கம் |
பெயர்: | சந்நிதி 2 [1] |
அமைவிடம் | |
ஊர்: | அச்சரப்பாக்கம் |
மாவட்டம்: | செங்கல்பட்டு |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | உமையாட்சீசர் |
தாயார்: | மெல்லியலாள் |
தல விருட்சம்: | சரக்கொன்றை |
தீர்த்தம்: | சங்கு தீர்த்தம், பானு தீர்த்தம், தேவ தீர்த்தம், சிம்ம தீர்த்தம். |
வரலாறு | |
தொன்மை: | புராதனக்கோயில் |
இறைவன்
மூலவர் ஆட்சீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன.
வழிபட்டோர்
இரண்டு சந்நிதிகள் இத்திருத்தலத்தில் உள்ளன.கண்ணுவ முனிவர், கௌதம முனிவர் வழிபட்ட திருத்தலம்.[1]
தல புராணம்
திரிபுரம் எரிக்க சிவபெருமான் செல்லும் பொழுது தேர் அச்சு முறிந்தது. இதற்கு கணபதியிடம் விடை பெறாததே காரணம் என்று கணபதிக்கு ஆசி வழங்கிய தலம் இதுவாகும். அச்சு + இறு + பாக்கம் - அச்சிறுபாக்கம் என்பது மருவி அச்சரப்பாக்கம் என தற்போழுது வழங்கப்பெறுகிறது.
அகழ்வாராய்ச்சிகள்
இங்கு இடம்பெற்ற பல்வேறு தரப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் தொண்டை மண்டலப் பிரதேசத்தில் 6 ஆம் 7 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இப்பாத்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. இத்தொண்டை மண்டலப் பிரதேசம் சங்க காலத்தில் பல்லவர்களின் அரசியல் செல்வாக்கு தழைத்தோங்கிய பிரதேசமாகக் காணப்படுகின்றது.[3]
போக்குவரத்து
திருச்சி-சென்னை அதிவேக பாதையில் 79 ஆவது கிலோமீட்டர் தொலைவில் அச்சிறுபாக்கம் அமைந்துள்ளது.
திருச்சி-சென்னை உடனான பகையிரதப் பாதையில் அச்சிறுபாக்கமே தலைமையகமாகும்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- அச்சிறுபாக்கம் (அச்சரப்பாக்கம்) தல புராணம் பரணிடப்பட்டது 2013-01-19 at the வந்தவழி இயந்திரம்