அசோகா (2008 திரைப்படம்)

அசோகா (Ashoka) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் பிரேம் மேனன் மற்றும் ரகுவரன் நடிப்பில் வெளிவந்த, இந்திய பிரதமரை பாதுகாக்கும் மெய்காப்பாளரை பற்றிய கதையாகும். இந்த படம் வெளிநாட்டு வாழ் இந்தியர் பிரேம் மேனனின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியானது. இத்திரைப்படத்திற்கு சபேஷ் முரளி இசையமைத்துள்ளார்.[1]

அசோகா
இயக்கம்பிரேம் மேனன்
தயாரிப்புபிரேம் மேனன்
இசைசபேஷ் முரளி
நடிப்புபிரேம் மேனன்
ரகுவரன்
லிவிங்ஸ்டன்
அனுஶ்ரீ
பூஜா பாரதி
ஆனந்த ராஜ்
வெளியீடுபெப்ரவரி 1, 2008 (2008-02-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுறுக்கம்

இந்த படத்தில் பிரேம் மேனன் தேசிய பாதுகாப்பு காவற்படையில், நாட்டின் பிரதமரை பாதுகாக்கும் அதிகாரியாக வருவார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலில் இருந்து பிரதமரின் உயிரை காப்பாற்றுவதாக படம் ஆரம்பமாகும்.

அசோகா பிரதமரை காப்பற்றிய பிறகு, மருத்துவர் சொல்வார் பிரதமர் பிழைத்து கொண்டார், ஆனால் அவருக்கு இதயம் வலது பக்கம் உள்ளது என்றும் இது ஒரு அரிய தோற்றம் என்றும் கூறுவார். அசோகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதமரை எப்படி காப்பாற்றுவார் என்பது மீதமுள்ள படத்தின் கதையாகும்.

தயாரிப்பு

2004 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்படமானது, நான்கு ஆண்டுகள் கழித்து 2008 இல் வெளியானது.[2]

சான்று

"https://tamilar.wiki/index.php?title=அசோகா_(2008_திரைப்படம்)&oldid=29911" இருந்து மீள்விக்கப்பட்டது