அசன்பே சரித்திரம்
அசன்பே சரித்திரம் என்பது 1885 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு தமிழ்ப் புதினம் ஆகும். இதுவே தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது புதினமாகக் கருதப்படுகிறது[1][2]. இதை இலங்கை எழுத்தாளர் முகம்மது காசீம் சித்தி லெப்பை என்பவர் எழுதினார்.
அசன்பே கதை
அசன்பேயுடைய கதை எகிப்திய அரச வம்சத்தைச் சேர்ந்த அசன் என்பவனின் சாகசங்களையும் காதலையும் சொல்லுகிறது. மர்மங்கள் நிறைந்த கதை. உண்மையே வெல்லும் என்ற சத்திய நெறியை இக்கதை போதிக்கின்றது. இக்கதை பின்வருமாறு தொடங்குகின்றது:
“கல்விச் செல்வங்களிலேயே மிகச் சிறந்த விளங்கா நின்ற மிசுறு தேசத்தின் இராஜதானியாகிய காயிரென்னும் பட்டணத்திலேயே செய்யிது பாஷா என்பவர் இராச்சிய பரிபாலனம் செய்யும் காலத்தில், அந்த பாஷாவினுடைய மாளிகைக்குச் சமீபமான ஓர் அலங்காரமுள்ள மாளிகையில் யூசுபுபாஷா என்பவரொருவர் இருந்தார். அவர் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். மஹா பாக்கியவந்தர். கதீவுடைய மந்திரிமார்களிலொருவர் மதம் பிடித்த யானையை நடத்தும் பாகன் அதை நயபயத்தினால நல்வழி நடத்துவதுபோல அரசன் கோபித்தாலும் அவனை விட்டகலாது அப்போது வேண்டும் யுக்தி புத்திகளை யிடத்திடித்துப் புகட்டும் தொழிலை விடாமலிருப்பவர். நேரான காரியங்களில் சோராத துணிவுள்ளவர். பின்னே வருங்கருமங்களை முன்னே அறிந்து தெரிவிக்கும் மூதறிவுடையவர். காலமும் இடமும் ஏற்ற கருவியும் தெரிந்தவர். பிரஜைகளெல்லாம் தமது திறமை முதலிய நற்குணங்களைப் புகழப் பெற்றவர். ஆங்கிலேயர், பிரான்ஸியர் முதலிய ஐரோப்பியர்களெல்லாம் தமது விவேக நுட்பத்தை வியந்து பாராட்டும்படி யதிகாரஞ் செலுத்துபவர்[3].
ஆய்வுகள்
அசன்பே சரித்திரத்தையும், பிரதாப முதலியார் சரித்திரத்தையும் ஒப்பிட்டு முனைவர் தே. நேசன் என்பவர் ஒப்பாய்வு செய்துள்ளார்[4].
மறு பதிப்புகள்
- சித்திலெவ்வை – அசன்பே கதை, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம், திருச்சிராப்பள்ளி 1974
மேற்கோள்கள்
- ↑ தமிழில் சிறுபான்மை இலக்கியம், ஜெயமோகன்
- ↑ நீல. பத்மநாபன் (1992). Modern Indian Literature. சாகித்திய அக்காதெமி. p. 382. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7201-324-8.
- ↑ திறனாய்வுக் கட்டுரைகள், எம். ஏ. நுஃமான்
- ↑ தமிழின் இரு முதல் நாவல்கள்
உசாத்துணைகள்
- வாழ்வியற் களஞ்சியம். தொகு 2.