அக்சயா (நடிகை)

அக்ஷயா (Akshaya Rao) என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் படங்களில் தோன்றியுள்ளார். பிரபல நடிகை சாயா தேவியின் பேத்தி ஆவார்.[1]

அக்ஷயா ராவ்
பிறப்புஇந்தியா, தமிழ்நாடு, சென்னை
பணிநடிகை, உருமாதிரிக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2006–தற்போது

தொழில்

அக்ஷயா ராவ் தமிழ் படங்களில் முன்னணி வேடங்களில் நடிப்பதற்கு முன்பு, கோவில்பட்டி வீரலட்சுமி (2003) படத்தில் சிம்ரனுடன் துணைப் பாத்திரத்தில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இன்றுவரை இவருக்கு பெரிய பெயர் வாங்கிக்கொடுத்த தமிழ் படமாக கலாபக் காதலன் (2006) உள்ளது. அப்படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரத்தின் மைத்துனியாக, அவரைக் கவர விரும்புபவராக எதிர்மறையான பாத்திரத்தில் நடித்திருந்தார். 2000 களின் பிற்பகுதி முழுவதும் குறைந்த செலவில் எடுக்கபட்ட தமிழ் படங்களில் இவர் தொடர்ந்து நடிதுவந்தார், குறிப்பாக மு. கருணாநிதி எழுதிய உளியின் ஓசை (2008) மற்றும் விசயகாந்து நடித்த எங்கள் ஆசான் போன்ற படங்களில் நடித்தார்.[2] 2012 ஆம் ஆண்டளவில், ஐம்பதுக்கும் ஆசை வரும், மன்மத ராஜ்ஜியம், பட்டிக்காட்டு மாப்பிள்ளை, தசையினை தீ சுடினும் மற்றும் தெலுங்கு திரைப்படமான நாக்கண்டு ஒக்கடு உள்ளிட்ட படங்கள் இவரை ஒப்தம் செய்து தொடங்கப்பட்டன, ஆனால் அவை முழுமையடையாமல் போயின.

2014 ஆம் ஆண்டில், சுதீப் ரஞ்சன் சர்க்காரின் இந்தி சோதனை திரைப்படமான உம்ஃபோர்முங்: தி டிரான்ஸ்ஃபர்மேஷன் (2014) படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்று சர்வதேச அளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

திரைப்படவியல்

ஆண்டு படம் கநாபாத்திரம் குறிப்புகள்
2003 கோவில்பட்டி வீரலட்சுமி
2003 பார்த்திபன் கனவு மேகலா
2004 சகா
2004 மனசுக்குள்ளே விஜி
2006 மதராசி கீதா
2006 கலாபக் காதலன் கண்மணி
2008 பழனியப்பா கல்லூரி மடோனா
2008 உளியின் ஓசை முத்துநாகை
2009 கஜா பூஜா
2009 எங்கள் ஆசான் விஜி
2011 உயர்திரு 420 சாவித்ரி
2016 உம்ஃபோர்முங்: தி டிரான்ஸ்ஃபர்மேஷன் கஸ்தூரி இந்தி படம்
2019 யாளி இயக்குனராகவும்

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அக்சயா_(நடிகை)&oldid=23593" இருந்து மீள்விக்கப்பட்டது